ஒரு 'சுமை தாங்கி'
- roshin rajan
- Jun 3, 2023
- 1 min read
சிந்தை
சங்கீதம் 68:19 “ நாள்தோறும் நம்முடைய பாரங்களைத் சுமக்கிற நம்முடைய இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.!"
அன்பர்களே, மேற்கண்ட வசனம் பாரங்களை சுமக்கும் தேவனைப் பற்றி பேசுகிறது. நம்மில் யாரேனும் தாங்க முடியாத அளவுக்கு அதிக பாரத்துடன் வாழ்கிறோமா? அப்போது நமக்கு ஒரு 'சுமைதாங்கி' தேவன் உண்டு. நம்முடைய சுமைகளைச் சுமக்க அவர் போதுமானவர்.
கர்த்தர் நம்மை வசனம் மூலம் அழைக்கிறார், மத்தேயு 11:28, "வருத்தப்பட்டுப் 'பாரஞ்சுமக்கிறவர்களே' நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்". இவ்வுலக வாழ்வில் வாழும் போது பலவிதமான சுமைகளை நாம் எதிர்கொள்கிறோம், குறிப்பாக இந்தக் காலத்தில் நாம் இத்தகைய சிரமங்களுக்கும் சுமைகளுக்கும் மத்தியில் இருக்கின்றோம். இந்த பரபரப்பான வாழ்க்கையில், யாராலும் மற்றவர்களின் சுமைகளை அதிகமாக அறியவோ அல்லது ஆறுதல்படுத்தவோ முடியாது. அப்படியானால், இந்தச் சுமைகளைக் இறக்கி வைக்க ஒரு இடம் வேண்டும். அதுவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. நமக்காக நம் பாரங்களை சுமந்து நம்மை ஆறுதல்படுத்துபவர்.
அதுபோல மற்றொரு உண்மை இங்கே காணப்படுகிறது, அந்த பாரத்தையும் அல்லது சுமையையும் ஒரு நாளைக்கு மட்டும் தாங்கலாம் என்று கூறப்படவில்லை. 'நாள்தோறும்' அதாவது ஒவ்வொரு நாளும். இப்படி தினந்தோறும் நமக்கு உதவி செய்ய மற்ற யாரையாவது இந்த நெரிசல் வாழ்க்கையில் நமக்கு கிடைப்பார்களா?நம் கர்த்தர் நாள்தோறும் நம் பாரத்தை சுமக்க தயாராக நிற்கிறார், நாம் தினந்தோறும் அந்த இறைவனின் கரங்களில் நம் இதய பாரத்தை இறக்கி வைத்தால் மட்டும் போதும். இல்லை என்றால் அந்த பாரம் நம்மில் பலவித சிரமங்களை உருவாக்க விடும். ஒரு கழிவுத் தொட்டி தினமும் காலிச் செய்யாவிட்டால் அதில் இருந்து துர்கந்தம் வமிக்கும், அதுபோல நம் இதய பாரதத்தை இறக்கி வைக்கவில்லை என்றால் அது நம்மில் பல உடல்ரீதியான, மனநல சிரமங்களை உண்டாக்கும் என்பது ஒரு உண்மைதான். இந்த சந்தர்ப்பத்தில் நம்முடைய இந்த 'சுமை தாங்கி'யினுடைய சமூகம் நமக்கு எத்தனையோ நிம்மதியை தரும் ஒன்றாகும். அப்படியானால் ஏன் இப்படிபட்ட ஒரு ' சுமை தாங்கி' யை நம் வாழ்க்கைக்கு அழைக்க கூடாது! நம்முடைய எல்லா பாரங்களையும் சுமந்து தாங்கும் இந்த தேவனை நம் வாழ்க்கைக்கு அழைக்கலாம்! இந்த தேவனுக்காக நம் வாழ்க்கையை சமர்ப்பிக்கலாம்! அதற்காக இறைவன் நமக்கு உதவட்டும்!
இந்த கர்த்தரை இரட்சகராக ஏற்றுக் கொள்ளாத எவரேனும் இதைப் படித்துக் கொண்டிருந்தால், இந்த கர்த்தரை ஏற்றுக்கொண்டு அவருடைய மகனாகவும் மகளாகவும் மாற இன்றே முடிவு எடுங்கள், கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக! கர்த்தருடைய விலையேறப்பெற்ற நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக!
ஆமென்!
. Author ✍️ sis. Reny Saji
Comments