ஒரு சிந்தனை
" "
யோவான் 15:2 (“என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.”)
நம்மை "சுத்தம் பண்ண" ஒப்பு கொடுத்திருக்கிறோமா?
அன்பானவர்களே! " சுத்தம் செய்தல்" என்பது வேதனையானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒரு கிளையை வெட்டினால், மரம் நிச்சயமாக வேதனைப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுத்தம் செய்ய வெட்டப்படுவது ஒரு காயத்தை உண்டாக்கும். காயம் ஏற்படும் போது நமக்கு வலி உண்டாகும், ரத்தம் மற்றும் பலவற்றை இழக்கிறோம். இந்த மாதிரியான சுத்தம் செய்வதற்காக வெட்டப்படுவதை நம் வாழ்வோடு தொடர்புபடுத்தி பார்த்தால், நம் வாழ்வில் சில வலிகளும் இழப்புகளும் ஏற்பட்டிருக்கவில்லையா! அது எப்பொழுதும் நமக்கு தீங்கு விளைவிப்பதில்லை. ஏனென்றால், ஒரு விவசாயி அல்லது தோட்டக்காரன் தான் நட்ட மரம் காய்க்கும் என்று எதிர்பார்ப்பவர். மேலும் வேத வசனம் கூறுகிறது, "கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்". ஆனால் அவர் கனி கொடுக்கும் மரத்தை தான் சுத்தம் செய்கிறார், ஏனென்றால் அது அதிக பலனைத் தரும். ஆகவே, நம் வாழ்வில் கர்த்தர் சில ' சுத்தம் செய்தல்' அல்லது வலியின் அனுபவங்களை அனுமதிக்கிறார் என்றால், இதனால் நாம் விவசாயி விரும்பும் விதத்தில் அதிக பலனைக் கொடுக்கவேண்டும். இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால், தோட்டக்காரருக்கு நாம் கனி கொடுப்பவர்கள் என்பதில் நல்ல நம்பிக்கை இருக்கிறது. அதற்காகத்தான் நம்மை சுத்தம் செய்கிறார். மேலும் கனிக்கொடுக்காதவை அகற்றப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. இவ்வாறு கர்த்தர் நம்மை நீக்கி விடாமல், நம் வாழ்வில் சில சிரமங்களையும் கஷ்டங்களையும் அனுமதிக்கும் போது, நாம் சோர்ந்து போகாமல், "ஆண்டவரே நான் கனி கொடுப்பவன் என்று என்மேல் உமக்கு நம்பிக்கை உள்ளதினால் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்" என்று சொல்லிக் கொண்டு நாம் கர்த்தரை துதித்து, நம்முடைய கஷ்டங்களிலும் பாட்டு பாட ஆண்டவர் நமக்கு கிருபை செய்வாராக! இப்படிப்பட்ட " சுத்தம் செய்தல்" மூலம் நாம் கர்த்தருக்கு அதிக கனி கொடுக்கிறவர்கள் ஆக கர்த்தர் நமக்கு மேலும் மேலும் உதவி செய்வாராக! வரும் நாட்களில் இந்த சிந்தனை உங்கள் இதயங்களில் ஆழமாக வேலை செய்ய கர்த்தர் அருள் புரிவாராக!
தேவ நாமம் மகிமை படுவதாக ! ஆமென்!
Author ✍️ Sis.Reny Saji
Comments