°•°•°•°•°•°•°•°•°•°°•°•°•°•°•°•°•°•°•°
★ தேவனால் கூடாதது ஒன்றுமில்லை.
⁹ அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.
¹⁰ அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
¹¹ஆபிரகாமும் சாராளும் வயதுசென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று.
¹² ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமானபின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.
¹³ அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?
¹⁴ கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.
உங்களால் நம்ப முடிகிறதா? சாராள் மலடியாகவும், வயது முதிர்ந்தவளாகவும் இருந்தாள், குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தாள். ஆனால் அவள் ஈசாக்கைப் பெற்றெடுத்தாள். அது உண்மையிலேயே ஒரு அதிசயம்தான். இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் ஒரு அதிசயம் தான் , அவர் ஒரு கன்னிப் பெண்ணுக்குப் பிறந்தார்!
சாராளுக்கு ஒரு மகன் பிறப்பான் என்று கூறப்பட்டபோது, அவள் சிரித்தாள், ஏனென்றால் அந்த வயதில் அவள் பெற்றெடுப்பது மனிதனால் சாத்தியமற்றது. நாம் எப்போதும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்: தேவனுடைய வழிகள் வேறுபட்டவை. நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வகையில் அவர் செயல்படுகிறார். அவர் அற்புதங்களைச் செய்யும் தேவன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவர் மீது நம்பிக்கை வைத்து அவரிடம் ஜெபம் செய்வதுதான்.
குறிப்புகள்:
அற்புதங்களைச் செய்யக்கூடியவரை நம்புங்கள்.
எப்போதும் அவரை நம்புங்கள், ஏனென்றால் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.
📖 இன்றைய தினத்திற்கான வேத வசனம்: 📖
லூக்கா 1:37
"தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்."
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
AUTHOR ✍✍✍✍✍✍✍✍✍✍✍
SISTER SHINCY SUSAN
TRANSLATION
SISTER TEPHILA MATTHEW
Comments