top of page

மலட்டுத்தன்மையிலிருந்து ஆசிர்வாதத்திற்கு

*சாராளின் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்* 👩‍🦰

°•°•°•°•°•°•°•°•°•°°•°•°•°•°•°•°•°•°•°

★ ** ✨

சாராளைப் பற்றி வேதாகமத்தில் நாம் படிக்கும் முதல் விஷயம், அவள் ஆபிரகாமின் மனைவி, அவள் மலடி, அவளுக்கு குழந்தை இல்லை என்று தான்.(ஆதியாகமம் 11: 30)

அந்தக் காலத்தில், குழந்தைகளைப் பெற்றெடுப்பது ஒரு ஆசீர்வாதமாகக் கருதப்பட்டது, அதனால் மலடியான பெண்கள் ஆழ்ந்த அவமானத்தை அனுபவித்தனர். மலட்டுத்தன்மை என்பது மறைந்திருக்கும் பாவம் அல்லது குறைபாட்டின் விளைவு என்று மக்கள் நம்பினர்.

சாராளும் இந்த மன வலியையும் வேதனையையும் அனுபவித்திருப்பாள். அவள் மலடியாக இருந்ததால் தான் வெட்கத்தையும் அவமானத்தையும் சந்திக்க வேண்டியிருந்தது.

நம் வாழ்விலும் சில விஷயங்கள் அவமானம் அல்லது வேதனையை உண்டாக்கும். இவைகளுக்கு நமது செயல்கள் காரணமாக இருக்காது. பிறவியில் சிலர் பார்வையற்றவர்களாகவும், சிலர் உடல் ஊனமுற்றவர்களாகவும் பிறக்கிறார்கள். அப்படிப் பிறந்ததற்கு அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்கள் ஏன் இப்படி இருக்கின்றன என்று நீங்கள் பதில் தேடுகிறீர்களானால், சாராளின் வாழ்க்கையைப் பாருங்கள்.

சாராளின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, ​​அவளுடைய மலட்டுத்தன்மையை எவ்வாறு கர்த்தர் ஒரு ஆசீர்வாதமாக மாற்றினார் என்பதைக் காணலாம். அவள் ஈசாக்கைப் பெற்றெடுத்தபோது அவள் மூலம் கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது. அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதித்தார்.

(ஆதி 17: 16)

எனவே, கர்த்தரின் மகிமைக்காக கர்த்தர் இந்த சிறிய முட்களை நம் வாழ்வில் கொடுத்துள்ளார் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம். நம் வாழ்வில் உள்ள ஒவ்வொரு பிரச்சனையையும் தேவன் அறிவார். நம்முடைய பலவீனங்களை அவர் அறிவார். ஆம், இறுதியில் அவற்றை ஆசீர்வாதங்களாக மாற்ற அவரால் முடியும்.

*குறிப்புக்கள்:*

¶ முணுமுணுப்பதை விடுத்து, *_நம்மிடம் உள்ளதை கர்த்தரின் மகிமைக்காக பயன்படுத்துவோம்._*

¶ தேவன் மீது *_நம்பிக்கை_* வைப்போம். எல்லாவற்றையும் நம் நன்மைக்காக மாற்றக்கூடியவர் அவர்.

*இன்றைய தினத்துக்கான வேத வசனம்:*

📖 *ரோமர் 8:28* 📖

_அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் *அன்புகூருகிறவர்களுக்குச்* சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்._

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Author: Sis. Shincy Susan

 
 
 

Recent Posts

See All
Encouraging Thoughts

परीक्षा सहने वाला मनुष्य धन्य है!! जीवन में ऐसा कोई नहीं जिसके सामने प्रतिकूलताएँ और संकट न आए हों। प्रलोभन, चुनौतियाँ, संदेह के क्षण,...

 
 
 
Encouraging Thoughts

*Blessed is the one who remains steadfast under trial!* No soul is exempt from the adversities and hardships that life presents....

 
 
 
Encouraging Thoughts

പരീക്ഷ സഹിക്കുന്ന മനുഷ്യൻ ഭാഗ്യവാൻ !! ജീവിതത്തിൽ പ്രതികൂലങ്ങളും, പ്രതിസന്ധികളും ഇല്ലാത്ത ആരുമില്ല. പ്രലോഭനങ്ങൾ, വെല്ലുവിളികൾ,...

 
 
 

Comentarios


bottom of page