ஒரு சிந்தனை
""
2 தீமோத்தேயு 2:21 ("எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.")
நாம் ஒரு பயனற்ற பாத்திரம் என்று எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அல்லது நினைக்கிறீர்களா? அப்போது கர்த்தர் "எனக்கு நீ தேவை" என்று கூறுகிறார்.
கர்த்தர் ஒரு பெண் கழுதையின் குட்டியை தனது வாகனமாக ஆக்கியதை நாம் அறிவோம். எந்த மனிதனும் சவாரி செய்யாத மிருகம் என்று பைபிள் சொல்கிறது. நேற்று வரை பயன்படாத தான், இன்று உபயோகப் பாத்திரமாக மாறும் என்று அந்தக் கழுதை நினைத்திருக்காது. யாராவது உங்களிடம் கேட்டால், "ஆண்டவருக்கு வேண்டும்" (மத்தேயு 21:3) என்று நீங்கள் சொல்ல வேண்டும் என்று கர்த்தர் தம் சீஷர்களிடம் கூறினார். கர்த்தர் அந்தக் கழுதையைப் பயன்படுத்தினார் என்றால், நம்மை எவ்வளவு அதிகம். கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் பயன்படுத்த விரும்புகிறார். இன்று என்பது தேவன் நமக்காக ஆயத்தம் செய்துள்ள நேரம். வேதவசனம் சொல்வது போல், நாம் நம் எஜமானுக்கு ஒரு பயனுள்ள பாத்திரமாக மாற வேண்டும். அதற்காக நாம் தேவனுக்கு நம்மைச் சமர்ப்பிக்கலாம். கர்த்தருக்கு நம்மை "தேவை". அவர் நம்மை பயன்படுத்த விரும்புகிறார். அதற்காக தேவன் நம் இதயக் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கிறார், யாரேனும் அந்த இதயக் கதவைத் திறந்தால், தேவன் தன்னிடம் வர விரும்புகிறார். (வெளிப்படுத்துதல் 3:20 "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.") அந்த கர்த்தருக்கு நம் இருதயக் கதவைத் திறப்போம். நாம் பயன்படுத்தபடுவோம். நாம் ஒரு வெறும் பாத்திரமாக வாழ வேண்டியவர்கள் அல்ல, ஆனால் எஜமானுக்கு ஏற்ற கனத்துக்குரிய பத்திரங்களாய் பயன்படுத்தப்படவேண்டியவர்கள். அதற்காக ஜெபிப்போம், கர்த்தர் நமக்கு உதவுவார் என்று நம்புவோம்!
தேவனுடைய பரிசுத்த நாமம் என்றென்றும் மகிமைப்படுவதாக! ஆமென்!
✍️ Sis. Reny Saji
コメント