top of page

Encouraging Thoughts [ Tamil]

✨ *ஊக்கமளிக்கும் சிந்தனைகள் * ✨

°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°

*பர்னபாவைப் போல் - ஊக்கமளிக்கும் மகன்கள் மற்றும் மகள்களாக இருப்போம்*

பர்னபா என்பவர் "ஆறுதலின் மகன்" (அப்போஸ்தலர் 4:36) என்று அழைக்கப்பட்டார் - ஊக்கத்தின் மகன். பவுலின் கடந்த கால வாழ்க்கையினிமித்தம் எல்லோரும் அவருக்குப் பயந்தபோது, பர்னபா பயத்தை விட விசுவாசத்தைத் தேர்ந்தெடுத்தார். "பர்னபா அவனைக் கூட்டிக்கொண்டுபோய், அப்போஸ்தலரிடத்தில் கொண்டுபோனான்" (அப்போஸ்தலர் 9:27). மற்றவர்கள் பார்க்க முடியாததை அவர் கண்டு மற்றவர்கள் சந்தேகிக்கும் ஒரு நபருக்காக தைரியமாக நின்றார்

பர்னபாவுடைய மனதை வழிநடத்த, வதந்திகளையோ அல்லது கடந்தகால தோல்விகளையோ அனுமதிக்கவில்லை. மாறாக, மக்களிடத்தில் கர்த்தருடைய செயலை அவர் கண்டார். அவர் அந்தியோக்கியாவுக்கு வந்தபோது, அவர் "சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னார். (அப்போஸ்தலர் 11:23). பரிசுத்த வேதாகமம் அவரை "நல்ல மனிதர், பரிசுத்த ஆவியும் விசுவாசமும் நிறைந்தவர்" என்று அறிமுகப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 11:24). அவர் தாராளமாகவும் இருந்தார், ஏனென்றால் "தனக்கு உண்டாயிருந்த நிலத்தைவிற்று, அதின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்" (அப்போஸ்தலர் 4:37).

பர்னபா தனது வாழ்நாள் முழுவதும், மற்றவர்களை தூக்கிவிடுகிறவராக காணப்பட்டார். புதிய விசுவாசிகளை வரவேற்றார், சபையை பலப்படுத்தினார், மேலும் இரண்டாவது வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார். மற்றவர்கள் தயங்கியபோது, "பர்னபா யோவானைத் தங்களுடன் அழைத்துச் செல்லத் தீர்மானித்தார்" (அப்போஸ்தலர் 15:37). மக்கள் வளரவும், மக்களுடைய வாழ்க்கை மாறவும், கர்த்தரால் கிரியை செய்ய முடியும் என்று அவர் நம்பினார்.

உற்சாகப் படுத்துவது மிகவும் வலிமை மிக்கது என்பதை பர்னபா நமக்குக் காண்பிக்கிறார். நம்பிக்கையைப் பேசும் வாழ்க்கையானது, கவனிக்கப்படாதவர்களைக் காக்கும், பலவீனமானவர்களை பலப்படுத்துவது போல, நாமும் ஒரு மனிதனின் எதிர்காலத்தை மாற்ற முடியும். இன்றும், தேவன் ஊக்குவிப்பவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார். நாம் பர்னபாவைப் போல் இருப்போம் - மற்றவர்களை அவர்கள் இருப்பது போல் பார்க்காமல், கர்த்தர் அவர்களை உருவாக்குகிறதை அறிந்துகொள்வோம்.

*📖 VERSE TO REMEMBER 📖*

*1 தெசலோனிக்கேயர் 5:11*

_ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.._

🙏 *ஜெபம்*🙏

எங்கள் பரலோக பிதாவே,

பர்னபாவின் உதாரணத்திற்காக நன்றி. மற்றவர்களை பலப்படுத்தும் மற்றும் மீட்டெடுக்கும் வார்த்தைகளால் ஊக்குவிக்க எங்களுக்கு உதவி செய்யும். ஜனங்களை உம்மிடம் வழிநடத்தும் நம்பிக்கையின் கருவிகளாக எங்களை மாற்றும்.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்.


ஆமென்.



Writer # Sis Shincy Jonathan, Australia 🇦🇺

Transaltion # Bro Jaya Singh

Mission Sagacity Volunteers

 
 
 

Recent Posts

See All
Encouraging Thoughts [ Tamil]

*✨ மரணம் முறியடிக்கப்பட்டது ✨* மரணம் என்பது மனுக்குலத்தின் மிகப்பெரிய அச்சங்களில் ஒன்றாகும். "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6:23) என்று வேதாகமம் நமக்குச் சொல்கிறது. பாவத்தின் காரணமாக, மனினுக்குலம் த

 
 
 
Encouraging Thoughts

*✨ മരണം പരാജയപ്പെട്ടു ✨* മനുഷ്യരാശിയുടെ ഏറ്റവും വലിയ ഭയങ്ങളിലൊന്നാണ് മരണം. "പാപത്തിന്റെ ശമ്പളം മരണമാണ്" (റോമർ 6:23) എന്ന് ബൈബിൾ നമ്മോട് പറയുന്നു. പാപം നിമിത്തം മനുഷ്യവർഗം ദൈവത്തിൽ നിന്ന് വേർപെട്ടു, സ്

 
 
 
Encouraging Thoughts

✨मृत्यु पर विजय ✨ मृत्यु मानव जाति के सबसे बड़े भयों में से एक है। बाइबिल हमें बताती है कि "पाप की मजदूरी तो मृत्यु है" (रोमियों 6:23)। पाप के कारण, मानव जाति परमेश्वर से अलग हो गई थी और उसके पास स्वय

 
 
 

Comments


bottom of page