top of page

Encouraging Thoughts ( Tamil)

Writer: kvnaveen834kvnaveen834

✨ *ஊக்கமளிக்கும் சிந்தனை* 😁

°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°••°•°•

*யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து பாடங்கள் -★ 6*


*_தேவனுடைய பிரசன்னத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல்_*


*ஆதியாகமம் 39: 7-10*

_7சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்._

_8 அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார்._

_9 இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்._

_10 அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டுவந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை._


யோசேப்பின் கதை நம் வாழ்வில் தேவனுடைய பிரசன்னத்தை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. நீதியின் பாதையிலிருந்து விலகிச் செல்ல ஆசைப்படும் உலகில், பாவம் செய்வதிலிருந்து எவ்வாறு தடுக்க முடியும் என்று அறிகிறோம்.


போத்திபரின் மனைவி அவரைக் கவர்ந்திழுக்க முயன்றபோது, யோசேப்பின் பதில் அந்தச் செயலை நிராகரிப்பது மட்டுமல்ல, அது பாவத்தை பிரதிநிதித்துவப்படுத்துப் பற்றிய ஆழமான புரிதலாகவும் இருந்தது. ஒரு அந்நிய தேசத்தில், அவரை அறிந்தவர்களிடமிருந்து விலகி, போத்திபரின் மனைவியின் போக்கிற்கு அவர் எளிதாக இணங்கியிருக்க முடியும். இருப்பினும், கர்த்தரின் பிரசன்னம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கோ அல்லது மக்களுக்கோ மட்டுப்படுத்தப்படவில்லை என்பதை யோசேப்பு அறிந்திருந்தார். அவர் எங்கிருந்தாலும், கர்த்தரின் கண்கள் தன்மீது இருப்பதை அவர் அறிந்திருந்தார், தேவன் எல்லா இடத்தையும் பார்க்கிறார் என்ற இந்த உணர்வு பாவம் செய்வதிலிருந்து அவரைத் தடுத்தது.


தேவனுடைய பாதையிலிருந்து நம்மை விலக்கி வைக்கக்கூடிய சோதனைகளால் நாம் தொடர்ந்து தாக்கப்படும் உலகில் இருக்கிறோம். இடத்துக்கு பொருத்தமாக இருக்க வேண்டியதின் அழுத்தம், நெறிமுறையற்ற நடத்தையில் ஈடுபடுவது அல்லது உடல் ஆசைகளின் கவர்ச்சிக்கு அடிபணிவது போன்றவையாக இருந்தாலும், அவைகளை எதிர்கொள்ளும் திறவுகோல் கர்த்தருடைய பிரசன்னம் எல்லா நேரங்களிலும் நம்முடன் இருப்பதைப் புரிந்துகொள்வதில் உள்ளது. இதைப் பற்றி நாம் விழிப்புடன் இருக்கும்போது, பாவம் செய்வதை (அது வேறு யாருக்கும் தெரியாமல் செய்யலாம் என்ற சூழ்நிலையிலும்) நியாயப்படுத்துவது மிகவும் கடினமானதாக இருக்கும்.


ஆம், கர்த்தரின் பிரசன்னத்தைப் பற்றிய விழிப்புணர்வு, சோதனையை எதிர்க்கவும் கர்த்தருக்கு உண்மையாக இருக்கவும் நமக்கு உதவுகிறது.


கர்த்தருடைய பிரசன்னத்தைப் பற்றிய அறிவோடு வாழ்வதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் மற்ற உதாரணங்களை வேதாகமம் வழங்குகிறது. உதாரணமாக, சங்கீதம் 139 இல், தாவீது கர்த்தர் எங்கும் நிறைந்திருப்பதைப் பற்றி பிரதிபலிக்கிறார், தேவனுடைய பிரசன்னத்திலிருந்து தப்பி ஓடக்கூடிய இடம் இல்லை என்று கூறுகிறார். இந்த விழிப்புணர்வு தாவீதை பத்சேபாளைப் பெறுவதற்காக செய்த பாவத்திலிருந்து மனந்திரும்புவதற்கும், கர்த்தருக்கு முன்பாக வெளிப்படையான வாழ்க்கையை நடத்துவதற்கும் வழிநடத்துகிறது, அவருக்கு எதுவும் மறைக்கப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறது. அதேபோல, தானியேலின் அசைக்க முடியாத விசுவாசமும், கர்த்தருடைய பிரசன்னத்தை குறித்த நம்பிக்கையும் அவரைத் தீங்குகளிலிருந்து காப்பாற்றியது.


தேவனுடைய பிரசன்னத்தைப் புரிந்துகொள்வது பொறுப்புணர்வு மற்றும் கணக்கு ஒப்புவித்தல் உணர்வைக் கொண்டுவருகிறது. கர்த்தர் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார் என்பதை நாம் உணரும்போது, அது நமது முடிவுகளையும், செயல்களையும், எண்ணங்களையும் பாதிக்கிறது. நாம் ஒரு பரிசுத்தமான மற்றும் நீதியுள்ள தேவனுடைய முன்னிலையில் தொடர்ந்து இருக்கிறோம் என்பதை அறிந்து, நமது நடத்தையில் அதிக கவனம் செலுத்துவோம். இந்த உணர்வு நேர்மையான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது, அங்கு நாம் சோதனைகள் அல்லது சவால்களை எதிர்கொண்டாலும் கூட, நமது செயல்கள் தேவனுடைய சித்தத்துடன்  ஒத்துப்போகின்றன.


மேலும், தேவனுடைய பிரசன்னத்தை அங்கீகரிப்பது கடினமான காலங்களில் ஆறுதலையும் உறுதியையும் தருகிறது. அவருடைய சகோதரர்களால் அடிமைத்தனத்திற்கு விற்கப்பட்டது முதல் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது வரை யோசேப்பின் வாழ்க்கை சோதனைகளால் நிரப்பப்பட்டதாயிருந்தது. இருப்பினும், எல்லாவற்றிலும், தேவன் தன்னுடன் இருக்கிறார் என்பதை யோசேப்பு அறிந்திருந்தார், மேலும் இந்த அறிவு அவருக்கு சகித்துக்கொள்ளவதற்கும் உண்மையாக இருப்பதற்கும் பெலன் அளித்தது. இன்று நமக்கும் அப்படித்தான்; கர்த்தர் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொண்டால், அவர் நம்மை விட்டு விலகமாட்டார், கைவிடமாட்டார் என்பதை அறிந்து, எந்த ஒரு சூழ்நிலையையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்.


இறுதியாக, ஆதியாகமம் 39:7-10 இல் உள்ள போத்திபரின் மனைவிக்கு யோசேப்பு அளித்த பதில், நம் வாழ்வில் கர்த்தரின் பிரசன்னத்தைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டுதலாகும். இந்த விழிப்புணர்வுதான் நம்மை பாவத்திலிருந்து காத்து, நம் செயல்களை வழிநடத்தி, கஷ்ட காலங்களில் நமக்கு பலத்தையும் ஆறுதலையும் தருகிறது. யோசேப்பு, தாவீது மற்றும் தானியேல் ஆகியோர் கர்த்தரின் பிரசன்னத்தைப் பற்றிய அறிவோடு வாழ்ந்தது போல, நாமும் இந்த சத்தியத்தின் வெளிச்சத்தில் நம் வாழ்க்கையை வாழ அழைக்கப்படுகிறோம், அது நம் முடிவுகளை வடிவமைக்கவும், நம்மை நீதியின் பாதையில் வழிநடத்தவும் உதவும்.


*எடுத்து செல்ல:*

¶ *தேவ பிரசன்னம் எங்குமுள்ளது:* யோசேப்பைப் போலவே, நாம் எங்கிருந்தாலும் அல்லது எந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டாலும் கர்த்தர் எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த விழிப்புணர்வு நமது முடிவுகளையும் செயல்களையும் பாதிக்க வேண்டும்.

¶ *அனைத்து சூழ்நிலைகளிலும் நேர்மை:* வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெகு தொலைவில் இருந்தாலும், யோசேப்பு தனது உத்தமத்தைக் காத்துக்கொண்டார். வெளிப்புற அழுத்தங்களைப் பொருட்படுத்தாமல் தேவனுக்கு முன்பாக உண்மையாக இருந்தார். நாமும் அவ்வாறே செய்ய அழைக்கப்பட்டுள்ளோம்.

¶ *சோதனையில் வலிமை:* கர்த்தருடைய பிரசன்னத்தைப் புரிந்துகொள்வது, சோதனையை எதிர்ப்பதற்குத் தேவையான பலத்தை அளிக்கிறது.


*📖 இன்றைய தினத்திற்கான வேத வாக்கியங்கள் 📖*

*நீதிமொழிகள் 15:3*

_ கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது._


*சங்கீதம் 119:11*

_நான் உமக்கு விரோதமாக பாவம் செய்யாதபடிக்கு உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்._


🙏🙏🙏🙏🙏🙏🙏




✍️ ✍️ ✍️ Sis Shincy Jonathan Australia 🇦🇺

Translation by @ Sis Tephila Mathew

Mission sagacity Volunteer

 
 
 

Recent Posts

See All

Encouraging Thoughts

ഓരോന്നിനും ഓരോ സമയമുണ്ട് ജീവിതത്തിൽ എല്ലാറ്റിനും ഓരോ സമയമുണ്ട്. സന്തോഷത്തിന്, സങ്കടത്തിന്, ഉയർച്ചയ്ക്ക്, താഴ്ചയ്ക്ക്, വെല്ലുവിളികൾക്ക്,...

ENCOURAGING THOUGHTS

*✨ പ്രോത്സാഹനജനകമായ ചിന്തകൾ 😁* °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°• ★ *അവിടുന്നിന്റെ അനുഗ്രഹങ്ങൾ വിസ്മരിക്കരുത് !* നല്ല സമയങ്ങളിൽ...

Encouraging Thoughts

✨प्रेरणादायक विचार ✨ °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•° ★ उनके उपकारों को न भूलो! हम अक्सर अच्छे समय में ईश्वर के आशीर्वादों का जश्न मनाते...

Comments


bottom of page