Encouraging Thoughts ( Tamil)
*ஊக்கமளிக்கும் சிந்தை* 😁
°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°••°•°•
★ *மாறுபாடான உலகில் கறைபடாமல்: நோவாவின் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்*
* ஆதியாகமம் 6*
_5 மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,._
_7 அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்._
_8 நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது._
_9 நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்._
_13 அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்._
_14 நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு._
........
........
_22 நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்._
நாம் வாழும் உலகம் இருளாலும் தீமையாலும் நிரம்பியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். உலகத்தின் காரியங்களிருந்து வேறுபட்டு வாழ்வது சிரமமாக இருக்கிறது; ஆனால் அது நிச்சயமாக சாத்தியமற்றது அல்ல என்பதை நோவா மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையிலிருந்து நாம் பார்க்க முடியும். அநீதியுள்ள மக்கள் மத்தியில் பொல்லாத உலகில் வாழ்ந்த போதிலும், நோவா நீதியுள்ள, குற்றமற்ற மனிதனாகத் திகழ்ந்தார். தேவனுடன் உண்மையாக நடந்ததன் விளைவாக, தேவனுடைய பார்வையில் நோவாவுக்கு தயவு கிடைத்தது.
தேவனுடன் நடக்காமல், இவ்வுலகில் நாம் விளக்குகளாக பிரகாசிக்க மாட்டோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மெய்யான ஒளியாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மில் இல்லாமல் நாம் மற்றவர்களுக்கு பாதையை ஒளிரச் செய்ய முடியாது.
தேவன் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்தார் என்றும் வாசிக்கிறோம். நோவா இதற்கு முன் மழையைப் பார்த்ததுமில்லை அதைக்குறித்து கேள்விப்படாவிட்டாலும், தேவனின் ஆலோசனையின் அடிப்படையில் அவர் உண்மையாக ஒரு பேழையைக் கட்டினார். சுற்றியிருப்பவர்கள் கேலி செய்த போதும் அவர் தன் பணியில் கவனம் செலுத்தினார். அதனால் அவரும் அவரது குடும்பத்தினரும் காப்பாற்றப்பட்டனர்.
அப்படிப்பட்ட விசுவாசத்தையும் முழுமையான கீழ்ப்படிதலையும் உடையவர்களாக வாழ கர்த்தர் நமக்கு உதவுவாராக!
*எடுத்து செல்ல:*
¶ நாம் இந்த உலகில் இருக்கிறோம் ஆனால் இந்த உலகத்தார் அல்ல. தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் குற்றமற்றவர்களாகவும் பரிசுத்தமானவன்களாகவும் இருக்க வேண்டும்.
¶ தேவன் கட்டளையிட்ட காரியங்கள் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும், அவைகளை செய்ய வேண்டும். நாம் அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படிய வேண்டும்.
*📖 இன்றைய தினத்திற்கான வேத பகுதிகள் 📖*
*பிலிப்பியர் 2:14-15*
_14 ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,_
_15 கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றபிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்._
*உபாகமம் 5:32–33*
_உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தபடியே செய்யச் சாவதானமாயிருங்கள்; வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக நீங்கள் சுதந்தரிக்கும் தேசத்திலே பிழைத்துச் சுகித்து நீடித்திருக்கும்படி, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள்._
🙏🙏🙏🙏🙏🙏🙏