Encouraging Thoughts
- kvnaveen834
- Mar 31
- 2 min read
*✨ ஊக்கமளிக்கும் சிந்தனைகள் 😁*
°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•
★ *கர்த்தர் செய்த நன்மைகளை மறவாதே !*
சந்தோஷமான காலங்களில் கர்த்தர் செய்த ஆசீர்வாதங்களை நாம் அதிகமாக நினைவுகூருகிறோம். ஆனால் சோதனைகள் வரும்போது அவற்றை மிகவும் எளிதாக மறந்து விடுகிறோம்!
மாற்கு 8.14-21ல் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் இயேசு கிறிஸ்து எச்சரித்தார். இருப்பினும், சீடர்கள் அப்பத்தைக் கொண்டுவர மறந்துவிட்டதால், இயேசுகிறிஸ்து அவர்களுக்கு உணவு இல்லாததைக் குறிப்பிடுகிறார் என்று நினைத்தார்கள். வெறும் ஒருசில அப்பங்களால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உணவளித்ததை அவர்கள் கொஞ்ச நாட்களுக்குமுன் கண்டிருக்கவில்லையா? இருப்பினும் அவர்கள் அந்த அற்புதங்களை நினைவுகூரத் தவறிவிட்டனர், இதன் விளைவாக, படகில் உள்ள அனைவருக்கும் இயேசு தங்களுக்கு கிடைத்த ஒரு அப்பத்தால் கொடுக்க முடியும் என்றும் சிந்திக்கவில்லை.
இந்த சந்தர்ப்பத்தை மிகவும் குறிப்பிடத்தக்கதாக மாற்றியது என்னவென்றால், இயேசுகிறிஸ்து அப்பத்தை குறித்து இன்னும் குறிப்பிடவேயில்லை. அவர்
பரிசேயர்கள் மற்றும் ஏரோதுடைய புளித்த மாவாகிய அவர்களுடைய தவறான போதனைகள் மற்றும் மாய்மாலத்தை குறித்து எச்சரித்தார். ஆனால் சீடர்கள் தங்கள் சரீர தேவைகளைக் குறித்து மிகவும் கவனத்துடன் இருந்ததால், அவர்கள் ஆழ்ந்த ஆன்மீக பாடத்தை தவறவிட்டார்கள். அவர்களுடைய சிந்தனைகளை அறிந்த இயேசுகிறிஸ்து இவ்வாறாக கேட்டார்:
"நீங்கள் இன்னும் உணராதிருக்கிறீர்களோ?" (மாற்கு 8:21)
"நீங்கள் நினைவுகூராமலுமிருக்கிறீர்களா" (மாற்கு 8:18)
பரிசுத்த வேதாகமம் முழுவதும் இந்த மாதிரியைத் தான் காண முடிகிறது — அவருடைய வல்லமையைக் கண்ணாரக் கண்ட பிறகும் தேவனுடைய நடத்துதலை மக்கள் மறந்து விடுகிறார்கள். கர்த்தர் செங்கடலை பிரித்ததை கண்டிருந்த இஸ்ரவேலர்கள், வனாந்தரத்தில் கர்த்தருடைய நடத்துதலை குறித்து சந்தேகித்தனர் (யாத்திராகமம் 16). வானத்திலிருந்து அக்கினி இறக்கியதை எலியா கண்டிருந்தும், அவர் யேசபேலுக்கு பயந்து ஓடினார் (1இராஜா 19) பயந்து ஓடினார்.
இது நம் வாழ்க்கையிலும் நடக்கிறது. பிரச்சனைகள் வரும்போது, நாம் கலக்கமடைந்து, பிரச்சினையில் அதிகம் கவனம் செலுத்துகிறோம். ஆனால் கர்த்தர் நமக்குக் கற்பித்து கொடுக்க முயற்சிக்கிற காரியங்களை கற்றுகொல்வதில்லை. நம்முடைய பணத்தேவைகளுக்காக, சரீரசுகத்திற்காக மற்றும் எதிர்காலத்தை குறித்த காரியங்களில் கவலைப்படுகிறோம். ஆனால் உண்மையில், கர்த்தர் நம்மை நடத்தியதை சீக்கிரமாக மறந்து விடுகிறோம்.
கர்த்தர் செய்த உபகாரங்களை மறவாதீர்கள். அதற்கு பதிலாக, கர்த்தர் நம்மை எப்படியெல்லாம் நடத்திவந்தார் என்பதை நமக்கு நாமே நினைப்பூட்டி, ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் கர்த்தர் கற்றுக்கொடுக்கும் பாடங்களை கற்றுக்கொள்ள கர்த்தர் நமக்கு கிருபை செய்வாராக.
*சிந்தனைக்கு :*
¶ கர்த்தர் நமக்கு கற்றுக்கொடுக்க விரும்புகிற பாடங்களை சரியாக கற்றுக்கொளவதை விட்டுவிட்டு பிரச்சனைகளை குறித்து கவலைப்படாதேயுங்கள்.
¶ சோதனை வேளைகளில் வருத்தப்படுவதைவிட்டு, கடந்த காலங்களில் நம்மை நடத்திவந்த கர்த்தருடைய உண்மையை நினைத்து நம்முடைய விசுவாசத்தை நாமே பெலப்படுத்தி கொள்வோம்.
*📖 இந்த நாளுக்கான வசனம் 📖*
*சங்கீதம் 103:2*
_"என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே."_
🙏🙏🙏🙏🙏🙏🙏
Writer --- Sis Chrstina shaji, Dubai
Transaltion- Bro Jaya Singh
Mission Sagacity Volunteers
Opmerkingen