Encouraging Thoughts
- kvnaveen834
- Oct 16
- 1 min read
*-*********************
*✨ ஊக்கமளிக்கும் சிந்தனைகள் ✨*
°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•
*★ ரூத் புஸ்தகத்திலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள் – 4*
*_“ரூத் : ஒரு கீழ்ப்படிதலுள்ள மருமகள் ”_*
(ரூத் 3)
சொல்லப்படுகிற வார்த்தைகளை கேட்பது மட்டுமல்ல அவைகளின்படி நிச்சயமில்லாத சூழ்நிலைகளிலும் செயல்படுவதே உண்மையான கீழ்ப்படித்தலாகும்.
இரவு வேளையில், போவாசை சந்திக்கும்படி நகோமி சொன்ன வார்த்தைகளை அப்படியே கடைபிடித்தாள். அவள் சண்டைப்போடவோ, சந்தேகப்படவோ, தாமதம்பண்ணவோ இல்லை. “நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.” (ரூத் 3:5). அவளுடைய கீழ்ப்படிதலுக்கு தைரியமும் தாழ்மையும் தேவைப்பட்டபோதிலும், அவள் நம்பிக்கையுடனும் எந்த நிராகரிப்பு இல்லாமலும் செயல்பட்டாள்.
இதுபோன்ற கீழ்ப்படித்தலை வெளிப்படுத்துகிற ஏராளமான எடுத்துக்காட்டுகளை பரிசுத்த வேதாகமத்தில் காணமுடிகிறது.
மழை பெய்வதை அதுவரை காணாதிருந்தும், நோவா கர்த்தருக்கு கீழ்ப்படிந்து பேழையை உண்டுபண்ணினான். ஆசரிப்பு கூடாரத்தை உண்டுபண்ணும்படி கர்த்தர் சொன்னதுபோலவே மோசே செய்து முடித்தார். எந்த ஊருக்கு போகிறோம் என்று அறியாமலே கர்த்தர் சொன்னதினால் ஆபிரகாம் புறப்பட்டு போனார். இயேசுகிறிஸ்து அழைத்தவுடனே சீஷர்கள் தங்களுடைய வலைகளை விட்டுவிட்டு அவரை பின்பற்றினார்கள்.
கீழ்ப்படிதலுக்கு முன்பாக புரிந்துகொள்ளுதல் உருவாகிறது. அவைகளுக்கு எந்தவிதமான விளக்கமும் தேவைப்படவில்லை. மாறாக அவர்கள் நம்பிகையுடன் செயல்பட்டார்கள்.
இன்று சிறிதும் பெரிதுமான காரியங்களில், நாமும் விசுவாசத்துடன் கீழ்ப்படித்தலின் வாழ்க்கை வாழும்படியாக அழைக்கப்பட்டிருக்கிறோம். பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படியும்படியாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். (எபேசியர் 6:1).
தேவனுடைய பிள்ளைகளாக இருப்பதினால், எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் கர்த்தருக்கு கீழ்ப்படியும்படியாக தான் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
ரூத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்வது : உடனடியாக கீழ்ப்படிவது, தாழ்மை, முழுமையாக கீழ்ப்படிவது. நாம் கீழ்ப்படிந்து நடக்கும்போது, எதுவும் நமக்கு தென்படாத சூழ்நிலையிலும் நம்முடைய அன்பையும், தேவன்மீதுள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறோம்.
*📖 நினைவுகூர வேண்டிய வசனம் 📖*
*1 சாமுவேல் 15:22*
_“கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்”_
*🙏 ஜெபம் 🙏*
பரலோக பிதாவே ,
எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் கீழ்ப்படிவதின் முக்கியத்துவத்தை உணர்த்தியதற்காக உமக்கு ஸ்தோத்திரம். உம்முடைய வசனத்திற்கு கீழ்ப்படிந்து வாழவும், அவைகளை எந்தவித தாமதமும் முறுமுறுப்பும் இல்லாமல் கடைபிடிக்கவும் தேவையான கிருபையை தாரும். ரூத்தை போன்ற தைரியத்தையும், நோவாவை போன்ற விசுவாசத்தையும், சீஷர்களுடைய தீவிரத்தையும் எங்களுக்கு தாரும். எங்கள் கீழ்ப்படித்தலின் வழியாக நாங்கள் செய்கிற அனைத்து செயல்களிலும் உமக்கே மகிமை உண்டாகட்டும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.
Writer--- Sis Shincy Jonathan, Australia 🇦🇺
Transaltion--Bro Jaya Singh
Mission Sagacity Volunteers

Comments