top of page

Missionary story

Writer: kvnaveen834kvnaveen834

பல மிஷனரி ஊழியங்களில் ஈடுபட்டு, சுவிசேஷத்தைப் பரப்புவதில் தனது உணர்ச்சிப்பூர்வமான பிரசங்கத்தாலும், அயராத அர்ப்பணிப்பாலும் எண்ணற்ற உயிர்களைத் தொட்ட ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு தேவ மனிதர் தான் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல அமெரிக்க சுவிசேஷகர் டி. எல். மூடி. அவர்கள்.

அவர் பிப்ரவரி 5, 1835 ல் மாசச்சுசெட்ஸ், நார்த்ஃபீல்டில் பிறந்தார். மிக இளம் வயதிலேயே தந்தையை இழந்த அவரையும் உடன்பிறந்தவர்களையும், அவர்களது தாய் மிகவும் கஷ்டப்பட்டு தான் வளர்த்தார். தனது பதினேழாம் வயதில் பாஸ்டனில் உள்ள தனது மாமாவுடன் சென்றது மூடியின் வாழ்க்கையில் ஆவிக்குரிய மாற்றங்களுக்கு வழிவகுத்தது. மூடியின் மாமா ஒரு செருப்புத் தொழிலாளி, செருப்புக் கடை நடத்தி வந்தார். அவருடைய மாமா அவரை ஞாயிறு பாடசாலைக்கு அனுப்பினார். மூடியும் மகிழ்ச்சியோடே அதில் பங்கெடுத்தார். அங்கு எட்வர்ட் கிம்பல் என்ற ஒரு ஆசிரியர் இருந்தார். ஒரு நாள், துல்லியமாக சொன்னால், ஏப்ரல் 25, 1855 ல், மூடியைப் பார்க்க எட்வர்ட் அவர்கள் அந்த கடைக்கு வந்தார். அந்த சந்திப்பு மூடியின் இரட்சிப்புக்கு வழிவகுத்தது. அவர் கர்த்தரை இரட்சகராக ஏற்றுக்கொண்டார். (17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த எட்வர்ட் கிம்பலின் மகனை இரட்சிப்புக்குள் வழி நடத்தினது மூடி தான் என்றும் வரலாற்று புத்தகங்கள் கூறுகின்றன.) மூடி தனது மறுபிறப்புக்குப் பிறகு கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். ஒரு மாதம் கழித்து அவர் மவுண்ட் வெர்மான்ட் தேவாலயத்தில் உறுப்பினராக விண்ணப்பித்தார். ஆனால், கமிட்டியின் கேள்விகளுக்கு துல்லியமாக பதிலளிக்க முடியாமல் மூடி தனது உறுப்பினர் பதவியை இழந்ததாகவும், பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு மூடி தனது உறுப்பினர் பதவியைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

அவருக்கு 19 வயது இருக்கும் போது, மூடி ஒரு கடின உழைப்பாளியான இளைஞராகவும், வளரும் வாலிப கிறிஸ்தவராகவும் இருந்தார். அந்த வயதில் அவருக்கு வடக்கு வெல்ஸ் தெருவில் உள்ள ஞாயிறு பள்ளி வகுப்பில் பாடம் நடத்த வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அதற்கு மூடி கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான ஆசிரியர்கள் இருப்பதாக கண்காணிப்பாளரிடம் இருந்து பதில் வந்தது. ஆனால் மூடி தன் ஆசையை கைவிட தயாராக இல்லை. சொந்தமாக ஒரு ஞாயிறு பள்ளி வகுப்பைத் தொடங்க முடிவு செய்தார். அதற்காக கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 18 குழந்தைகளுடன் மூடி அவர்கள் தேவாலயத்திற்கு வந்தார். அந்த நாளை தனது வாழ்வின் மகிழ்ச்சியான ஞாயிற்றுக்கிழமை என்று அவர் விவரிக்கிறார். 1859 ல், குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்தது. 1860 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் மூடியின் ஞாயிறு பள்ளியை பார்வையிட்டார். ஆனால் 1859 ல் மூடி ஒரு புதிய பாடத்தைக் கற்றுக்கொண்டார். இந்த அனுபவம் அவருடைய எதிர்கால சுவிசேஷப் பணிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அந்நாட்களில் மூடியின் ஆசிரியர் ஒருவர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மரணத்திற்கு சமீபமாக இருந்தார். இந்த ஆசிரியர் இறப்பதற்கு முன் நிறைவேற்ற விரும்பின ஒரு கடைசி ஆசையை இருந்தது. அவர் இறப்பதற்கு முன், தனது மாணவர்கள் அனைவரும் கர்த்தரை விசுவாசித்து இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் தனது நோயால் மிகவும் சோர்வடைந்தார், எல்லா குழந்தைகளையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசுவதற்கு அவருக்கு வலிமையோ ஆரோக்கியமோ இல்லை. ஆனால் மூடி அவருக்கு உதவினார். மூடி அனைத்து குழந்தைகளையும் அவர்களது வீடுகளில் சந்தித்து அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க அவருடன் கூட சென்றார். 10 நாட்களுக்கு பிறகு வீடுசந்திப்பு ஊழிய முயற்சியில் வெற்றி கண்டார்கள். அவர்களால் அந்தப் பிள்ளைகள் அனைவரையும் இரட்சிப்புக்கு நேராக வழிநடத்த முடிந்தது. இறுதியாக, ஆசிரியர் விடைபெற்று தனது தாய் வீட்டிற்குத் திரும்பும்போது, இந்தக் குழந்தைகள் அனைவரும் அவரைப் வழியனுப்ப ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார்கள். இந்த அனுபவம் மூடி அவர்களுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்வு பல ஆத்துமாக்களை கிறிஸ்துவிடம் கொண்டு வர தூண்டுதலாக இருந்தது.

லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தொழிலதிபராகத் தொடர்வது உண்மையில் நஷ்டம் என்பதை உணர்ந்த மூடி, ஆத்துமாக்களை வெல்வதே கர்த்தர் விரும்புகிற ஒரே தொழில் என்பதை உணர்ந்த மூடி, கர்த்தரின் கடின உழைப்பாளியாக மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்.

அவருடைய வாழ்வில் நடந்த நிகழ்வுகள் நம்மை ஊக்கப்படுத்துவதாக.



Written by ✍️; Sis Jancy Rojan varghese

Translation by; Sis Tephila Mathew

Mission sagacity Volunteers


 
 
 

Recent Posts

See All

Encouraging Thoughts

ഓരോന്നിനും ഓരോ സമയമുണ്ട് ജീവിതത്തിൽ എല്ലാറ്റിനും ഓരോ സമയമുണ്ട്. സന്തോഷത്തിന്, സങ്കടത്തിന്, ഉയർച്ചയ്ക്ക്, താഴ്ചയ്ക്ക്, വെല്ലുവിളികൾക്ക്,...

ENCOURAGING THOUGHTS

*✨ പ്രോത്സാഹനജനകമായ ചിന്തകൾ 😁* °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°• ★ *അവിടുന്നിന്റെ അനുഗ്രഹങ്ങൾ വിസ്മരിക്കരുത് !* നല്ല സമയങ്ങളിൽ...

Encouraging Thoughts

✨प्रेरणादायक विचार ✨ °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•° ★ उनके उपकारों को न भूलो! हम अक्सर अच्छे समय में ईश्वर के आशीर्वादों का जश्न मनाते...

Comments


bottom of page