அன்புள்ள அப்பா,
உங்களுடைய அன்புக்குரிய மகன் சிலுவையில் பாடுகளை அனுபவித்தபோது உங்களுடைய எல்லையில்லாத அன்பு எங்கே போனது?
அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். (ரோமர் 5.8)
பாவம் செய்கிறவர்களுக்காக பலிசெலுத்தப்பட வேண்டும் என்பது பாவத்திற்குரிய சட்டத்தின் அடிப்படையில் தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்தது.
ஒரு அன்பான தகப்பன் தன்னுடைய ஒரு பிள்ளையை கொலைசெய்யும்படியாக கொடுப்பாரா? அது சட்டத்திற்கு புறம்பானதல்லவா? ஆம், இங்கே தான் தேவனுக்கு மனிதனுடன் இருந்த அன்பு அதிகமாக வெளிப்பட்டது. அவர் மனப்பூர்வமாக பாவத்தின் பாரத்தை தன்மேல் ஏற்றுக்கொண்டு, அவருடைய நீதியை விட்டுவிட்டு, பரிசுத்தராகிய இயேசு கிறிஸ்துவை பலியாக ஒப்புக்கொடுத்தார்.
சற்று அமைதியாக இருந்து சிந்தியுங்கள்.
இந்த முழு பிரபஞ்சத்தையும் படைத்த சர்வவல்லவர், நீதிகிடைக்காமல், உதவியற்றவராக, நிர்கதியாக நிற்கிறார்.
அவ்வேளையில் அவர் அனுபவித்த வலியை வெளிப்படுத்த எந்த வார்த்தைகளும் இல்லை.
அந்த ஒரே தேவன் தம்மை தாழ்த்தி இந்த உலகத்திற்கு வந்தார்.
நாமெல்லாரும் அவருடைய நீதியை பெற்றுக்கொண்டு அவருடைய சமூகத்தில் வரும்போது, நம்மை மிகமேன்மையான நிலைமைக்கு நேராக உயர்த்தும்படியாக அவர் தம்மை தாழ்த்தினார் என்பதை நினைவுகூருவோம்.
இன்றைக்கு சகலத்துக்கும் சொந்தமானவராகவும், சகலத்தையும் அரசாட்சி செய்கிறவராகவும் நீதியை சுதந்தரித்தவராகவும் நம்முடைய கர்த்தர் வாழ்கிறார்.
Written by Br. Roshan Rajan
Translated by Br. Jaya Singh
Kommentare