top of page

Encouraging Thoughts

ஒரு சிந்தை

விசுவாசம்

எபிரெ.11:1 "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. "

அன்பானவர்களே! மேலே சொன்னது போல் விசுவாசத்துக்கு ஒரு வரையறையை நாம் பார்க்கலாம். அதற்கு நம்மை வழிநடத்தும் விசுவாசத்தின் 5 படிகள் பின்வருமாறு.

1. நம்பிக்கையை இழக்காதீர்கள்.

2. அவிசுவாசத்தால் சந்தேகப்படாதீர்கள்.

3. விசுவாசத்தில் பலமாக இருங்கள்.

4. கர்த்தர் சக்தி வாய்ந்தவர் என்பதை முழுமையாக நம்புங்கள்.

5. தேவனுக்கு மகிமை கொடுங்கள்.

இதன் அடிப்படையில் ரோம. 4:19-22 பார்க்கவும். அங்கே ஆபிரகாமை விசுவாசத்திற்கு உதாரணமாகக் காணலாம். ஆபிரகாம் என்ன செய்தார்? இந்த 5 படிகள் அவரது வாழ்க்கையில் பின்பற்றப்பட்டன.

1. ரோம.4 : 19 -- "நம்பிக்கை தளரவில்லை"

அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். இங்கே "எண்ணாதிருந்தான்" என்ற வார்த்தைக்கு ஆழமான அர்த்தம் உள்ளது. இதனால் இருவரது உடல்களின் உயிரற்ற தன்மையை உணர்ந்தோ அல்லது புரிந்து கொண்டோ அவர் நம்பிக்கை இழக்கவில்லை (இன்றைய காலக்கட்டத்தின் படி சொன்னால் அவர்கள் உடல் ரீதியாகவோ அல்லது மருத்துவ அறிவியலில் சாத்தியமில்லாத ஒன்று). அங்கே ஆபிரகாம் எல்லாவற்றையும் விட கர்த்தரின் வாக்குத்தத்தத்திலோ அல்லது விசுவாசத்திலோ தளரவில்லை.

2. ரோம.4 : 20 -- " அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல் "

இங்கே ஆபிரகாம் அவிசுவாசத்தின் மூலம் கர்த்தரின் வாக்குத்தத்தக்கத்தை சந்தேகிக்கவில்லை. அவருக்கும் சாராவுக்கும் வயது காரணமாக உடல் குறைபாடுகள் இருந்ததால், கடவுள் சொன்னது நடக்குமா என்று சந்தேகிக்கவில்லை.

3. ரோம.4 : 21 -- " தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார் என்று முழு நிச்சயமாய் நம்பி"

ஆபிரகாம், தேவன் வல்லமையுள்ளவர் என்று முழுமையாய் நம்பினார் என்று வாசிக்கிறோம் . ஆபிரகாம் கடவுளின் வல்லமையில், தம்முடைய எங்கும் நிறைந்திருப்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார், மேலும் அவருடைய மற்றும் சாராளின் பலவீனம் எதுவாக இருந்தாலும், கர்த்தரின் சக்தி மேலோங்கும் மற்றும் தேவனால் கூடும் என்று அவர் தனது இதயத்தில் முற்றிலும் உறுதியாக இருந்தார்..

4. ரோம. 4: 21 -- " விசுவாசத்தில் வல்லவனானான்"

ஆபிரகாம் கர்த்தரின் வேலையைச் சந்தேகிக்காததால், கர்த்தர் மீதான விசுவாசத்தால் பலப்பட முடிந்தது.

5. ரோம. 4 : 21 -- " தேவனை மகிமை படுத்தி...".

ஆபிரகாம் விசுவாசத்தில் தளராமல், சந்தேகப்படாமல், பலப்படுத்தப்பட்டதால், அந்த உறுதியை அவன் இருதயத்தில் பெற்றான். அதன் மூலம் கர்த்தருக்கு மகிமை கொடுக்க நேர்ந்தது.

பிலிப்பி. 4 : 6 - " உங்கள் விண்ணப்பங்களை "ஸ்தோத்திரத்தோடே" கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்கு தெரியப்படுத்துங்கள் "இங்கே பவுலும் தேவனுக்கு நன்றி செலுத்தவும் அல்லது மகிமைப்படுத்தவும் கூறுகிறார்..

1தெச 5 : 17,18 - " இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யுங்கள் " இங்கே மீண்டும் பவுல் தேவனை மகிமைப்படுத்த அழைக்கிறார். விசுவாசம் இருந்தால் மட்டுமே சரியாக ஜெபிக்க முடியும். நாம் யாரிடம் ஜெபிக்கிறோமோ அந்த தேவன் நம்முடைய விஷயத்தில் செயல்பட முடியும் என்ற நல்ல விசுவாசம் நமக்கு இருந்தால் மட்டுமே, நாம் ஜெபித்தால் பிரயோஜனம் இருக்கும்.

இவ்வாறே இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் பல்வேறு தேவைகளும் விருப்பங்களும் உள்ளன. நாம் நம் தேவனிடம் ஜெபிக்கும்போது, ​​அதைச் செய்வதற்கு என் கர்த்தர் போதுமானவர் என்று விசுவாசிக்கிறோமா? நம்முடைய ஜெபத்தின் விஷயத்தில் கர்த்தர் செயல்பட காத்திருக்கும்போது நாம் விசுவாசத்தில் தடுமாறுகிறோமா? நாம் தேவனை சந்தேகித்தோமா? சிறிது காலதாமதம் செய்தாலும் நம் தேவைகளை தேவன் நிறைவேற்ற வல்லவர் என்று அவரை நம்பி பலம் பெறுகிறோமா? தேவன் நம் விஷயத்தில் வேலை செய்கிறார் என்ற முழுமையான உறுதி நமக்கு இருக்கிறதா? அப்படியானால் அந்த உறுதியின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் தேவனுக்கு மகிமை கொடுக்க முடிகிறதா? தேவனே, நீர் என் பிரச்சினையில் செயல்படுவதால் நன்றி சொல்ல முடிகிறதா? அங்குதான் வேதம் சொல்கிறபடி நாம் ஆபிரகாமை முன்மாதிரியாகக் கொள்ளலாம். நம்முடைய காரியம் என்னவாகவும் இருக்கட்டும்! மனிதர்களின் பார்வையில், சூழ்நிலைக்கு ஏற்ப, உலக முறைப்படி, மருத்துவ அறிவியலில் எந்த வகையிலும் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறோமா? அப்படியானால் அன்பர்களே, வேதத்தின்படி, இந்த 5 படிகளை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். அது நம்மால் முடியும் என்பதற்கு ஆபிரகாமின் வாழ்க்கை ஒரு உதாரணம். ஆபிரகாம் நம்மைப் போன்ற ஒரு மனிதன் தான். எனவே நமக்கும் இது சாத்தியமே. அப்படியானால் நாம் ஜெபிக்கிற விஷயத்தில் ஆண்டவர் நமக்கு பதில் தருவார் என்று விசுவாசத்தில் சோர்ந்து போகாமல், சந்தேகப்படாமல் விசுவாசித்து, பலவீனத்தில் தேவனுடைய பலத்தில் சக்தி பெற்றுக் கொண்டு, நம்முடைய காரியத்தில் தேவன் கிரியை செய்ய வல்லவர் என்று விசுவாசித்து, தேவன் கிரியை செய்கிறார் என்று ஸ்தோத்திரம் செய்து, தேவனை மகிமைப்படுத்தி ஜீவிக்க தேவன் நமக்கு உதவி செய்வாராக! விசுவாசத்தில் ஆபிரகாமின் முன்மாதிரியைப் பின்பற்றுவோம். சிருஷ்டி கர்த்தர் தனது படைப்பிலிருந்து அதைத்தான் விரும்புகிறார். அதற்கு தேவன் நம்மை பலப்படுத்துவாராக!

தேவ நாமம் மகிமைப்படுவதாக !! ஆமென்!!


Written by- 1✍✍✍✍✍✍✍

Sis Reny saji muscat


Translation by ✍✍✍✍✍✍✍✍

Sis Tephilla Mathew

 
 
 

Recent Posts

See All
Encouraging Thoughts

*✨ പ്രോത്സാഹനജനകമായ ചിന്തകൾ 😁* °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°• *★ രൂത്തിന്റെ പുസ്തകത്തിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ - 1* *_“മറുവശം കൂടുതൽ...

 
 
 
Encouraging Thoughts

प्रोत्साहित करने वाले विचार 😁 ★ रूत की किताब से सीख - 1 “जब दूसरी तरफ हरियाली दिखे, तब भी परमेश्वर पर भरोसा करना” (रूत 1:1–5) जब हम सूखे...

 
 
 
Encouraging Thoughts

*✨ Encouraging thoughts 😁* °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°• *★ Lessons from the book of Ruth - 1* *_“Trusting God when the...

 
 
 

Comments


bottom of page