நாம் மீண்டும் உயிருடன் எழும்புவோம்?!
ஒருசில நாட்களுக்குமுன்பு, இயேசு கிறிஸ்து உயிருடன் எழுந்ததை நினைவுகூர்ந்து, உலகத்திலுள்ள அனைவரும் அவருடைய உயிர்ப்பின் பண்டிகையை கொண்டாடினார்கள். மரணத்தின்மேல் அவர் வெற்றிசிறந்ததினால், உங்களுடைய மரணத்திற்கு பிறகு உயிர்த்தெழுவீர்கள் என்று நம்புகிறீர்களா?
ஆம், இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்ததால் நாமும் அவருடன் உயிரோடு எழும்புவோம்!
பாவத்தின் பலனாகிய மரணம் என்பது நம்முடைய வாழ்வை முடித்துவிடுகிறதா அல்லது எல்லா மனிதர்களும் நித்தியமாக வாழுவார்களா; நித்திய மகிழ்ச்சியுடன் நித்திய காலமாக வாழும் பரலோகத்திலா அல்லது நித்திய காலமாக நித்திய தண்டனை அனுபவிக்கும் இடமாகிய நரகத்திலா?
பரிசுத்த வேதாகமம் இவ்வாறாக சொல்கிறது, இயேசு கிறிஸ்து தான் தேவன் என்று உங்கள் வாயினால் அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று உங்கள் இருதயத்தில் விசுவாசத்தால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் (ரோமர் 10.9) அதாவது நரகத்தின் நித்திய தண்டனையிலிருந்து மீட்கப்படுவீர்கள்.
"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்" என்று இயேசு கிறிஸ்து (யோவான் 11:25-26)ல் கூறியிருக்கிறார். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." (யோவான் 3:16).
பாவத்தின் விளைவாக வருகிற தண்டனையிலிருந்து இரட்சிக்கப்பட மனிதன் என்ன செய்யவேண்டும் என்று இந்த வேத வசனங்கள் விளக்குகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து உங்களுடைய மற்றும் என்னுடைய இரட்சிப்புக்கான வழியை திறந்திருக்கிறார். மட்டுமல்ல அவருடைய உயிர்த்தெழுதலானது மனிதனை மீண்டும் பரலோகத்தில் கொண்டு போய் சேர்ப்பதை உறுதிப்படுத்துகிறது.
தேர்ந்தெடுக்கும் அனுமதியை தேவன் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். ஆனால் தேர்வு செய்வது உங்களுடையதாகிறது. உயிர்த்தெழுந்து கிறிஸ்துவுடன் பரலோகில் இருக்க வேண்டுமா அல்லது பாடுகள் நிறைந்த நரகத்தில் இருக்க விரும்புகிறீர்களா? இயேசு கிறிஸ்துவினால் கொடுக்கப்படுகிற இரட்சிப்பு மற்றும் அன்பை ஏற்றுக்கொள்வீர்களா?
தேர்வு செய்வது உங்களுடையதாகும்.
Written by ✍️//Sis Shincy Susan
Translation by// Bro Jaya Singh
Mission sagacity Volunteers
Tamil
Comments