top of page

ENCOURAGING THOUGHTS

Writer: kvnaveen834kvnaveen834

ஊக்கமூட்டும் சிந்தனைகள்

யோசேப்பின் வாழ்விலிருந்து சில பாடங்கள் - 3

காட்டிக்கொடுப்பது மற்றும் உத்தரவாதம் எடுப்பது - யோசேப்பு மற்றும் இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் இருக்கிற ஒற்றுமைகள்

ஆதியாகமம் 37.18-28

18. அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி,

19. ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான்,

20. நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள்.

21. ரூபன் அதைக் கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய்,

. . . . . . . . . . .

. . . . . . . . . . .

23. யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி,

24. அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.

25. பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்.

. . . . . . . . . . .

. . . . . . . . . . .

28. அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.

ஏராளமான பாடுகள் மற்றும் போராட்டங்கள் வழியாக யோசேப்பு கடந்துபோகவேண்டியிருந்தது. அவன் மேல் தன்னுடைய சொந்த சகோதரர்களுடைய பொறாமையினாலும் காழ்ப்புணர்ச்சியினாலும் அவன் எப்படியாக காட்டிக்கொடுக்கப்பட்டான் என்பதை இப்பகுதி விளக்குகிறது. தங்கள் இளைய சகோதரன் யோசேப்பு தங்கள் நலனைத் தேடி வருவதைக் கண்டபோது, நன்றியுள்ளவர்களாக இருப்பதற்குப் பதிலாக, அவருக்கு எதிராக சதி செய்து, அவரை "சொப்பனக்காரன்" என்று அழைத்து, அவரைக் கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள். யோசேப்பின் மேலங்கியை கழற்றி, ஒரு குழிக்குள் போடப்பட்டார். கடைசியில், இஸ்மவேலரிடம் 20 வெள்ளிக் காசுக்கு விற்கப்பட்டார். அவர்கள் அவரை எகிப்துக்குக் கொண்டு போனார்கள்.

தகப்பனுடைய அன்புள்ள மகனாக இருந்த யோசேப்பு அந்நிய தேசத்தில் அடிமையாக மாறும்போது, மிகுந்த துன்பங்களும் கஷ்டங்களும் அனுபவிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், எல்லா சோதனைகளின் மத்தியிலும் கர்த்தருக்கு உண்மையுள்ளவராக இருந்ததால் அவர் எகிப்தின் அதிபதியாக உயர்த்தப்பட்டது மட்டுமல்ல கொடிய பஞ்சத்திலிருந்து அவருடைய குடும்பத்தையும் மற்றும் ஏராளமானவர்களையும் காப்பாற்றினார்.

இவைகள் எல்லாம் இயேசு கிறிஸ்துவை காட்டிக்கொடுத்த அனுபவங்களின் நிழலாக இருக்கிறது. யோசேப்பைபோல நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அவருக்கு நெருக்கமானவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டார். அவருடனிருந்த பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான யூதாஸ் காரியோத், முப்பது வெள்ளிக்காசுக்காக இயேசுவைக் மதத் தலைவர்கக்கு காட்டிக்கொடுத்தான். இயேசு கிறிஸ்து பிடிக்கப்பட்டு, பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, மிகக் கொடுமையான துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டார். அவரை பரியாசம் பண்ணினார்கள், அடித்தார்கள், சிலுவையில் அறைந்தார்கள் - இது மோசமான குற்றவாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மரணம்.

இந்த இரண்டு சம்பவங்களிலும், ஒரு ஆழமான தொடர்பு இருப்பதை காண்கிறோம். யோசேப்பு மற்றும் இயேசு கிறிஸ்து ஆகிய இருவரும் காட்டிக் கொடுக்கப்பட்டனர், பெரும் துன்பங்களுக்கு ஆளாகினர். ஆனாலும், அவர்களின் வாழ்க்கை தோல்வியில் முடியவில்லை. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது என்பது, துன்பத்திற்கும் துரோகத்திற்குமான சரியான உதாரணம், ஆனாலும் முடிவடையவில்லை. அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் மீட்பின் அனைத்து செயல்களும் நிறைவேற்றப்பட்டது.

இயேசு சிலுவையில் மரித்ததன் மூலம் உலகத்தின் பாவங்களைத் தம்மீது ஏற்றுக்கொண்டார். அவருடைய உயிர்த்தெழுதலானது பாவம் மற்றும் மரணத்தின் மீதான வெற்றியைக் உறுதிப்படுத்தி, அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் நித்திய ஜீவனைக் கொடுக்கிறது. யோவான் 3:16 "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."

சிந்தனைக்குசோதனை மற்றும் துரோகத்தின் நேரத்தில், துன்பம் முடிவல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம்முடைய தற்போதைய சூழ்நிலைகளை விட நமக்கான கர்த்தருடைய திட்டங்கள் பெரியதாக இருப்பதால் அவரை நம்புங்கள்.

📖 நாளுக்கான வசனம் 📖

எரேமியா 29:11 _நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே".


Written by ✍️- Sis Shincy Jonathan

Translation by- Bro Jaya Singh

Mission sagacity Volunteer

Tamil version

 
 
 

Recent Posts

See All

Encouraging Thoughts

ഓരോന്നിനും ഓരോ സമയമുണ്ട് ജീവിതത്തിൽ എല്ലാറ്റിനും ഓരോ സമയമുണ്ട്. സന്തോഷത്തിന്, സങ്കടത്തിന്, ഉയർച്ചയ്ക്ക്, താഴ്ചയ്ക്ക്, വെല്ലുവിളികൾക്ക്,...

ENCOURAGING THOUGHTS

*✨ പ്രോത്സാഹനജനകമായ ചിന്തകൾ 😁* °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°• ★ *അവിടുന്നിന്റെ അനുഗ്രഹങ്ങൾ വിസ്മരിക്കരുത് !* നല്ല സമയങ്ങളിൽ...

Encouraging Thoughts

✨प्रेरणादायक विचार ✨ °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•° ★ उनके उपकारों को न भूलो! हम अक्सर अच्छे समय में ईश्वर के आशीर्वादों का जश्न मनाते...

Comments


bottom of page