✨ ஊக்கமளிக்கும் சிந்தனை 😁
°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°••°•°•
★ நெகேமியாவின் ஜெப வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
(வேதபகுதி: நெகேமியா 1, 2, 4 மற்றும் 6 அதிகாரங்கள்)
நெகேமியாவின் ஜெப வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பல மதிப்புமிக்க பாடங்கள் உள்ளன.
★ Prioritize - முன்னுரிமை கொடுத்தல்
நெகேமியா ராஜாவுக்கு பானபாத்திரக் காரனாக இருந்த பொறுப்புகளுக்கு மத்தியிலும் ஜெபத்திற்கு முன்னுரிமை அளித்தார். யூதர்களில் மீந்தவர்களின் துயரம் மற்றும் எருசலேமின் மதில் மற்றும் வாசல்களின் நிலை பற்றி அவர் கேள்விப்பட்டபோது, உபவாச நாட்கள் மற்றும் நிலையான ஜெபத்தை அவர் ஆரம்பித்தார் (1:3). அவர் இரவும் பகலும் ஜெபித்தார் என்று வாசிக்கிறோம் (1:6). தானியேலின் வாழ்க்கையிலும் ஜெபத்திற்கு இதற்கு ஒத்த அர்ப்பணிப்பை நாம் காணலாம்.
நம்முடைய அன்றாட வாழ்க்கை பரபரப்பாக இருந்தாலும், ஆவிக்குரிய விஷயங்களுக்கும், ஜெபங்களுக்கும், கர்த்தருடைய வார்த்தையைப் படிப்பதற்கும் நேரத்தை ஒதுக்குவதை உறுதி செய்வோம்.
★ Praise God - கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செய்தல்
நெகேமியாவின் ஜெபங்கள் கர்த்தரின் மகிமை மற்றும் அவரது செயல்களுக்கான துதி மற்றும் நன்றியினால் நிரப்பப்பட்டிருந்தன . அவர் கர்த்தரை "பரலோகத்தின் தேவன்" என்று குறிப்பிட்டார் மற்றும் அவரது மகத்துவத்தை அங்கீகரிக்கிறார்(1:5). நமது ஜெபங்களில் துதியும் நன்றியும் இருக்க வேண்டும், வெறும் வேண்டுதல்களும் விண்ணப்பங்களும் மட்டும் அல்ல.
★ Personalise - தனிப்பயனாக்குதல்
நெகேமியா இஸ்ரவேல் புத்திரர் சார்பாக பாவங்களை அறிக்கை யிடுவதை நாம் காண்கிறோம். அவர் மற்றவர்களைக் குறை கூறவில்லை, ஆனால் அவர் மற்றும் அவரது பிதாக்கள் வீட்டாரே பாவம் செய்ததாக ஒப்புக்கொள்கிறார் (1:6).
மற்றவர்களுக்காக ஜெபிக்கும் முன், மனந்திரும்பி, நம்முடைய பாவங்களை அறிக்கை செய்வோம். குருடனுக்கு குருடன் வழிகாட்ட முடியாது.
★ வேதத்தை அறிந்து கொள்ளுங்கள்
நெகேமியாவின் வேத அறிவு அவர்களுடைய பாவங்களையும் கீழ்ப்படியாமையையும் அடையாளம் காண காரணமாயிருந்தது (1:7). அவர்கள் தன்னிடம் திரும்பினால், அவர் அவர்களைத் திரும்பக் கொண்டு வருவார் என்பதை அவர் அறிந்திருந்தார் (1:9).
அவருடைய விருப்பத்தையும் முன்னுரிமைகளையும் புரிந்து கொள்ள நாம் கர்த்தருடைய வார்த்தையுடன் ஆழமான உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
★ சுருக்க ஜெபங்கள்
நெகேமியா ராஜாவிடம் தனது கோரிக்கையை தெரிவிக்கும் முன் ஜெபித்தார் (2:4). அந்த ஜெபம் மிகவும் சுருக்கமாகவும் குறிப்பிட்டதாகவும் இருந்திருக்கும். நம் இதயத்தின் நோக்கத்தை மதிக்கும் நம் தேவனால் நம் நேர்மையான, குறுகிய ஜெபங்கள் கேட்கப்படுகின்றன. மூழ்கும் போது உதவிக்காக பேதுருவின் கதறல், சிலுவையில் இருந்த கள்ளன், யாபேஸ் மற்றும் ஆயக்காரனின் ஜெபம் போன்ற எடுத்துக்காட்டுகள் சுருக்கமான ஜெபங்களின் சக்தியைக் காட்டுகின்றன.
அலுவலகத்திற்குள் நுழையும் முன், நோயாளியை பரிசோதிக்கும் முன், ஆம்புலன்ஸ் கடந்து செல்வதைக் காணும் போது, நமது அன்றாட நடைமுறைகளில் சிறு ஜெபங்களை இணைத்துக் கொள்வோம்.
★ ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஜெபம் செய்யுங்கள்
சன்பல்லாத்து, தொபியா மற்றும் பலர் அவர்களுக்கு எதிராக சதி செய்தபோது நெகேமியா ஜெபிப்பதைப் பார்க்கிறோம் (4:9).
மக்கள் அவர்களை பயமுறுத்தி எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவதை நிறுத்த முயன்றபோது அவர் மீண்டும் ஜெபிப்பதைக் காண்கிறோம்.(6:9).
நம் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும், நாமும் உதவிக்காக அவரை நாடுவோம்.
எடுத்து செல்ல:
¶ பரபரப்பான வாழ்க்கை இருந்தபோதிலும் ஜெபத்திற்கும் கர்த்தருடைய வார்த்தையைப் படிப்பதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள்.
¶ ஜெபங்களில் துதியும் நன்றியும் இருக்க வேண்டும், வெறும் வேண்டுதல் மட்டும் அல்ல.
¶ மற்றவர்களுக்காக ஜெபிக்கும் முன் உங்கள் சொந்த பாவங்களை அறிக்கையிடுங்கள்.
¶ குறுகிய, இதயப்பூர்வமான ஜெபங்கள் எந்த சூழ்நிலையிலும் பயனுள்ளதாக இருக்கும்.
¶ அவருடைய வார்த்தையுடன் ஆழமான உறவின் மூலம் கர்த்தருடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
¶ ஒவ்வொரு வாழ்க்கை சூழ்நிலையிலும் கர்த்தரின் உதவியை நாடுங்கள்.
📖 இன்றைய தினத்திற்கான வேத வசனம் 📖
பிலிப்பியர் 4:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
Written by- ✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍
Sis Shincy Susan wayanad
Translation by ✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍
Sis Tephilla Mathew USA
Commentaires