Encouraging Thoughts
- kvnaveen834
- 5 days ago
- 1 min read
*✨ ஊக்கமளிக்கும் சிந்தனைகள் 😁*
°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•
*★ என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் ?*
இந்த கேள்வியை இயேசு கிறிஸ்து தம்முடைய சீடர்களைப் பார்த்து கேட்டார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை பார்த்து இந்த கேள்வியை கேட்டால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும் ?
பரிசுத்த வேதாகமத்தில், இயேசு கிறிஸ்துவை குறித்து சிலர் யோவான் ஸ்நானகன் என்றும், சிலர் எலியா என்றும், சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும், நாசரேத்திலிருந்து வந்த தச்சனுடைய மகன் என்றும் சொன்னார்கள். இன்றைக்கும் சிலர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஒரு சரித்திர புருஷனாகவும், சிலர் அற்புதங்களை செய்கிறவராகவும், நல்ல போதனைகளை தருகிற போதகராகவும், சிலுவையில் மரித்தவராகவும் நினைக்கிறார்கள். இன்னும் சிலர், போராட்டமான நேரத்தில் நோக்கி பார்க்கிறவராக இயேசு கிறிஸ்துவை நினைக்கிறார்கள்.
ஆனால் இயேசு கிறிஸ்துவை உண்மையாக அறிந்தவர்களுக்கு அவர் இன்னும் மேலானவராக இருக்கிறார்.
ஒரு நண்பனிடம் பேசுவதுபோல அவர் ஆபிராகம் மற்றும் மோசேயுடன் பேசியிருக்கிறார். அவரை தன்னுடைய மேய்ப்பராக தாவீது அறிந்திருந்தார் (சங்கீதம் 23:1). நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று பேதுரு சொன்னார். (மத்தேயு 16:16).
சரியான பதில் என்னவென்றால் — அவர் தான் கிறிஸ்து, மெய்யான இரட்சகர், அளவில்லாமல் மனிதனை நேசிக்கிற தேவகுமாரனாக இருக்கிறார். அவர் தம்முடைய ஜீவனை கொடுத்து நமக்கு நித்திய ஜீவனை தந்திருக்கிறார்.
நம்மை ஒருபோதும் கைவிட்டுவிடாத நல்ல நண்பராக (யோசுவா 1:5), நம்முடைய உதவியாளர் (எபிரெயர் 13:6), நம்முடைய தேற்றரவாளனும் நம்முடைய பெலனுமாக இருக்கிறார் (சங்கீதம் 27:1).
உங்களுடனும் என்னுடனும் அவர் தனிப்பட்ட உறவை வைத்துக்கொள்ள விரும்புகிறார்.
இன்றைக்கு ஜெபத்தில் அவருடன் பேசினீர்களா?
இன்றைக்கு வேதம் வாசித்து அவருடைய சத்தம் கேட்டிர்களா?
இயேசு கிறிஸ்து உங்கள் சத்தத்தை கேட்பதற்கு ஆவலாக இருக்கிறார். நாம் அவருடன் நெருங்கி வந்து அவருக்கு முதலிடம் கொடுத்தால், நம்முடைய எல்லா கேள்விகளுக்கும் பதிலை நிச்சயம் தருவார் _"ஆண்டவரே, நீரே எனக்கு எல்லாம்."_
*📖 நினைவுகூர வேண்டிய வசனம் 📖*
*யாக்கோபு 4:8*
_"தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்."_
*🙏 ஜெபம் 🙏*
_"ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உங்களுடைய ஜீவனை கொடுத்து எனக்கு நித்திய ஜீவனை தந்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடன் ஒரு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள கிருபை செய்யும். உம்மை அதிகமாக அறியவும், உம்மை அனுதினமும் தேடவும், உம்முடைய வழிகளில் நடக்கவும் கிருபை செய்யும். ஆமென் ."_
✍️ ✍️ ✍️ ✍️ Sis Shincy Jonathan, Australia 🇦🇺
Transaltion by -- Bro Jaya Singh
Mission Sagacity Volunteers
Comentarios