Encouraging Thoughts
- kvnaveen834
- 6 days ago
- 1 min read
*★ பரபாஸ் : நம் அனைவரின் சித்திரம் *
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னமே, பரபாஸ் என்ற ஒரு மனிதன் விடுதலை செய்யப்பட்டான். நாம் அனைவரும் பெற்றிருக்கிற இரக்கத்தையும் விடுதலையையும் அவனுடைய சரித்திரமானது வெளிப்படுத்துகிறது.
பரபாஸ் என்பவன் ஒரு மோசமான கைதியாக, கலகக்காரனாக, கொலைக்கு குற்றவாளியாகவும் இருந்தான், (மாற்கு 15: 7). பண்டிகையின்போது ஒரு கைதியை விடுதலையாக்கும்படி பிலாத்து முன்வந்தபோது, எல்லா மக்களும் பரபாஸைத் தான் தேர்வுசெய்தார்கள். அதற்கு பதிலாக, பிதாவுடைய பாவமில்லாத மகன் — கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் சிலுவையில் அறையப்பட்டார் (மத்தேயு 27:15 – 26).
பரபாஸை ஒரு கதாநாயகன் என்று நினைப்பது எளிது, ஆனால் உண்மை என்னவென்றால் — அவர் நம் அனைவரின் அடையாளமாக இருக்கிறான்.
பரிசுத்த வேதாகமம் இவ்வாறாக சொல்கிறது “ஏனென்றால் எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாக மாறினார்கள் " என (ரோமர் 3:23)லும் பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். என
ரோமர் 6:23.
ஆமாம், நம்மத்தியில் பாவமில்லாதவர்கள் யாரும் இல்லாததினால், பரபாஸைப் போல, நாம் அனைவரும் தண்டிக்கப்பட்டு - மரணத்திற்கு தகுதியானவர்களாகவும் நித்தியமாக கர்த்தரை விட்டு பிரிந்தவர்களாக மாறினோம்.
ஆனால் தேவனோ, தம்முடைய பெரிதான அன்பினால், நாம் அனைவரும் இரட்சிக்கப்படும்படியான வழியை உண்டுபண்ணினார்.
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3.16).
இயேசு கிறிஸ்து ஒரு உதவியற்ற குற்றவாளியல்ல மாறாக அவர் மனப்பூர்வமாக தம்மையே ஒப்புக்கொடுத்தார். அவர் மரித்ததினால் நாம் பிழைக்கிறோம். அவர் நம்முடைய பாவங்களை தம்மீது ஏற்றுக்கொண்டு தம்மை அவருடைய நீதியை நமக்கு கொடுத்து நம்மை நீதிமானாக மாற்றினார்.
இன்றைக்கும் இந்த அழைப்பு வந்துகொண்டு இருக்கிறது.
“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் ” (அப்போ.16:31).
இயேசு கிறிஸ்து தருகிற விடுதலையை நீங்கள் பெற்றுக்கொள்வீர்களா?
*📖 நினைவு கூறவேண்டிய வசனம் 📖*
*ரோமர் 5:8*
_“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.”_
*🙏ஜெபம்🙏*
_பரலோக பிதாவே,_
_உங்களுடைய அளவில்லாத இரக்கத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம். பரபாஸைப் போல குற்றவாளியாக இருந்தும், உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பலியினால் என்னை விடுதலையாக்கினீர். அந்த நன்றியுடன் அனுதினமும் வாழவும், உம்முடைய வழிகளில் நடந்து, உமக்கு மகிமை கொண்டுவரவும் எனக்கு உதவி செய்யும்._
_இயேசு கிறிஸ்த்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்._
✍️ ✍️ ✍️ ✍️ Sis Shincy Jonathan, Australia 🇦🇺
Transaltion @ Bro Jaya Singh
Mission Sagacity Volunteers
Comments