✨ ஊக்கமளிக்கும் சிந்தை 😁
°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°••°•°•
★ இது ஒரு புத்தாண்டு! ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டி ஆகிவிட்டீர்களா?
2 கொரித்தியர் 5:17
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
புத்தாண்டு மக்கள் சிறந்த நபர்களாக மாறுவதற்கான தீர்மானங்களை எடுத்து, சுய முன்னேற்றத்திற்காக பாடுபடுவதற்கான நேரமாக இருக்கிறது. கடந்த கால பிரச்சனைகள் மற்றும் தவறுகளை விட்டுவிட்டு, அவற்றை சரிசெய்யும் நோக்கில் நாம் முயற்சிக்கும் நாள் இது.
இருப்பினும், உண்மையான மகிழ்ச்சியான புத்தாண்டுக்கு உண்மையான மாற்றம் முக்கியமானது. முடிவுகள் மற்றும் தீர்மானங்கள், நன்மை பயக்குமென்றாலும், நாம் கிறிஸ்துவுடன் இணைக்கப்படவில்லை என்றால், நமது பழைய சுயத்தை செம்மைப்படுத்த மட்டுமே உதவும். அது பழைய மனுஷனை பூசி மொழுகி புதிதாக காட்டுவதாக இருக்கும், ஆனால் உண்மையில் புதிதல்ல.
இயேசு கிறிஸ்து மூலமாக மட்டுமே, ஒருவர் உண்மையிலேயே புதிய படைப்பாக மாற்றப்பட முடியும். அவர் ஒருவரே உங்கள் பாவங்களை மன்னிக்க முடியும். அவர் மட்டுமே உங்களுக்கு ஒரு புதிய இதயத்தை கொடுக்க முடியும்.
நீங்கள் இன்னும் இந்த மாற்றத்தை அனுபவிக்கவில்லை என்றால், இப்போதே அதற்கான நேரம்.
பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது: 'எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,' ( ரோமர் 3:23). பாவத்தின் சம்பளம் மரணம் ( ரோமர் 6:23) மனிதர்களாகிய நாம் இந்த நித்திய தண்டனையிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. நல்ல செயல்களோ புனிதப் பயணங்களோ நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லாது .
ஆனால் ஒரு நல்ல செய்தி இருக்கிறது! தேவன் ஒரு தீர்வை வழங்கியுள்ளார்: தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். ( யோவான் 3:16).
கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.( ரோமர் 10:9). ஆம், உங்கள் பாவங்களை அறிக்கையிடுவதன் மூலமும், அவர் உங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்று நம்புவதன் மூலமும், இயேசு கிறிஸ்துவை உங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்வதன் மூலம், நீங்கள் இரட்சிக்கப்படலாம்.
விசுவாசிகளாகிய நாம், நம்முடைய கெட்ட பழைய வழிகளை ஜெயிக்க கர்த்தரின் உதவியை நாடி ஒரு புதிய சிருஷ்டியாக வாழ முயற்சிப்போம். கலாத்தியர் 5:24 சொல்லுகிறது போல, கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். (ரோமர் 12:2)
நம் வாழ்க்கை நம்மை சந்திக்கும் அனைவருக்கும் கிறிஸ்துவின் தன்மையை பிரதிபலிக்கட்டும். இந்த முயற்சியில் கர்த்தர் நம்மை வழிநடத்தட்டும்.
உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட புத்தாண்டு வாழ்த்துக்கள்!
எடுத்து செல்ல :
¶ உண்மையான மாற்றம் மற்றும் புதிய தொடக்கத்திற்காக கிறிஸ்துவைத் தழுவுங்கள்.
¶ ஒரு புதிய படைப்பாக வாழுங்கள், உங்கள் மனதில் கிறிஸ்துவின் தன்மையை பிரதிபலிக்கும் வகையில், உங்கள் மனதை புதுப்பித்து மறுரூபமாகுங்கள்.
📖 இன்றைய தினத்திற்கான வேத வசனம் 📖
2 கொரிந்தியர் 5:17
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
🙏🙏🙏🙏🙏🙏🙏
✍️ ✍️ ✍️ ✍️ ✍️Sis Shincy susan
Translation by : Sis Tephila Mathew
Commenti