top of page

Encouraging Thoughts

**✨ ஊக்கமளிக்கும் எண்ணங்கள் 😁**

°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•

**★ ரூத்தின் புத்தகத்திலிருந்து பாடங்கள் - 1**

****“மறுபக்கம் பசுமையாகத் தெரிந்தாலும் தேவனை நம்பும் மனப்பான்மை”****

(ரூத் 1:1–5)

நாம் வறண்ட மற்றும் கடினமான காலத்தில் இருக்கும்போது, இன்னொரு பக்கம் பசுமையாகவும் நம்பிக்கையளிப்பதாகவும் தெரிகிறது—ஆனால் நாம் எங்கே இருக்கிறோமோ அங்கேயே தேவனை நம்பத் தேர்ந்தெடுக்கும்போது, அவருடைய வழங்குதலை நாம் காண ஆரம்பிக்கிறோம்.

ரூத் புத்தகம் பெத்லெகேமில் ஏற்பட்ட வறட்சியுடன் துவங்குகிறது—அது “அப்பத்தின் வீடு” என்று அழைக்கப்படும் இடமாகும். இது நியாயாதிபதிகள் ஆட்சி செய்த காலத்தில் நடந்தது, மக்கள் தங்கள் பார்வையில் செம்மையானதை செய்த காலம்.

சிறந்த சூழ்நிலைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் எலிமெலேக் மற்றும் அவரது குடும்பம் வாக்குத்தத்த தேசத்தை விட்டு மோவாபுக்குச் சென்றார்கள். விவேகமான ஒரு முடிவாகத் தெரிந்தது, ஆனால் நாசமடைந்த முடிவுக்கு அவர்களை அழைத்துச் சென்றது—அவர் மற்றும் அவரது மகன்கள் அங்கே இறந்தார்கள்.

இதேபோன்ற ஒரு எடுத்துக்காட்டை லோத்தின் வாழ்க்கையிலும் பார்க்கலாம். சோதோம் துன்மார்க்கமான இடமாக அறியப்பட்டாலும், அது பசுமையான பள்ளத்தாக்குகளால் சூழப்பட்டுள்ளது என்பதற்காக, லோத்து அங்கு வாழ தேர்ந்தெடுத்தார். ஆனால் அந்த தீர்மானத்தின் முடிவு அவரது குடும்பத்துக்கு அழிவை ஏற்படுத்தியது.

ஆனால் கடினமான காலங்களில் தேவனை நோக்கித் திரும்பியவர்களுக்கு தேவன் தன் கரத்தை வெளிப்படுத்தினார் என்ற பல உதாரணங்களை வேதாகமம் கூறுகிறது. இஸ்ரவேலர்கள் பாலைவனத்தில் மன்னாவையும் நீரையும் பெற்றனர். சாறிபாத்தில் இருந்த ஒரு விதவை தனது மாவும் எண்ணெயும் குறையாமல் பெற்றார். ஆகார் தேவனை நோக்கி அழைத்தபோது ஒரு கிணற்றருகே நம்பிக்கையை கண்டார். வறண்ட காலங்கள் தேவனுடைய வழங்குதலால் ஆசீர்வாத இடங்களாக மாறின—ஏனெனில் அவர்கள் அவரை நம்பினர்.

உண்மையான சவால் என்னவெனில்: எளிதாகத் தெரிகிறதை நோக்கி ஓடப்போகிறோமா, அல்லது எப்போதும் தோல்வியுறாத தேவனை நம்பி அவருடன் தங்கப்போகிறோமா? எப்போதும் உடனடியாக அவர் கொடுக்கமாட்டார். ஆனால் அது எப்போதும் நிச்சயமானதுதான்.

**📖 இன்றைய வசனம் 📖**

**புலம்பல் 3:25**

*“தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.”*

**🙏 ஜெபம் 🙏**

இரக்கமுள்ள தேவனே, உமது நிச்சயமான வழங்குதலுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். வாழ்க்கை நிலையற்றதாகவும் வறண்டதாகவும் தோன்றும்போது, எங்கள் சொந்த அறிவை நம்பாமல், உம்மையே நம்பி, உமக்காக காத்திருக்க எங்களுக்கு உதவிசெய்யும்.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமென்.


✍️ ✍️ ✍️ Sis Shincy Jonathan, Australia 🇦🇺


Transaltion - Bro Jaya Singh


Mission Sagacity Volunteers

 
 
 

Recent Posts

See All
Encouraging Thoughts [ Tamil]

✨ *ஊக்கமளிக்கும் சிந்தனைகள் * ✨ °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•° *பர்னபாவைப் போல் - ஊக்கமளிக்கும் மகன்கள் மற்றும் மகள்களாக இருப்போம்* பர்னபா என்பவர் "ஆறுதலின் மகன்" (அப்போஸ்தலர் 4:36) என்று அழைக்

 
 
 
Encouraging Thoughts

✨ *പ്രോത്സാഹജനകമായ ചിന്തകൾ* ✨ °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•° *നമുക്ക് പ്രോത്സാഹിപ്പിക്കുന്ന മക്കളാകാം -ബർണബാസിനെ മാതൃകയാക്കാം* ബർണബാസിനെ “ആശ്വാസത്തിന്റെ പുത്രൻ” (പ്രവൃത്തികൾ 4:36) - 'പ്രോത്സാഹനത്തി

 
 
 
Encouraging Thoughts

प्रोत्साहन भरे विचार ✨ °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•° आइए हम बरनबास की तरह बनें - प्रोत्साहन के पुत्र और पुत्रियां बरनबास को "सांत्वना का पुत्र" (प्रेरितों के काम 4:36) कहा गया था — यानी प्रोत्

 
 
 

Comments


bottom of page