top of page

Encouraging Thoughts

*" கழுகைப் போல உயருவோம் "*

சிறகில்லாத பறவை என்பது பறப்பதற்காக பிறந்தும், பறக்க முடியாமல் பூமியுடன் பிணைக்கப்பட்டுள்ள ஒன்றாகும். பரிபூரணம் இல்லாமல் அதாவது குறைவின் வெளிப்பாடாகும். தேவனுடைய வல்லமை இல்லாத மனிதனும், உயரமாக பறக்க முடியாமல் பூமியுடன் ஒட்டிக்கொண்ட இறக்கையற்ற பறவையைப் போன்றவனாக இருக்கிறான்.


ஒரு பறவை பறப்பதற்காகவே படைக்கப்பட்டது, ஆனால் இறக்கைகள் இல்லாமல் அதன் நோக்கத்தை நிறைவேற்ற முடிவதில்லை. அதேபோல, மனிதர்கள் தேவனுடன் ஐக்கியத்தில் வாழவே படைக்கப்பட்டுள்ளனர். தேவன் இல்லாமல் உயரப் பறக்கும் வலிமை இல்லை. யோவான் 15:5-ல் நாம் இவ்வாறாக வாசிக்கிறோம்: "என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது."


சிறகுகள் இல்லாத பறவையானது, தேவனின் ஆவி இல்லாத வாழ்க்கையைக் வெளிப்படுத்துகிறது. அது பாவத்தையோ, போராட்டங்களையோ அல்லது உலகத்தையோ வெல்ல முடியாது. சிறகுகள் சுதந்திரத்தைக் குறிக்கின்றன. பாவம் நம்மை எவ்வாறு அடிமைப்படுத்துகிறது என்பதை பரிசுத்த வேதாகமம் நமக்குக் காட்டுகிறது. ஆனால் இயேசுகிறிஸ்து நம்மை விடுவிக்கிறார்.


கலாத்தியர் 5:1ல் "சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருக்கும்படி கிறிஸ்து நம்மை விடுவித்தார். " இயேசுகிறிஸ்து இல்லாவிட்டால், நாமும் இறக்கைகள் இல்லாத பறவையைப் போன்றவர்கள் தான். நாம் கட்டுண்டிருப்பதால், கடவுள் வடிவமைத்த வாழ்க்கையை நம்மால் வாழ முடியாமல் இருக்கிறோம்.


ஒரு பறவைக்கு இறக்கைகள் இல்லாவிட்டாலும், அவற்றை கொடுக்க கர்த்தரால் முடியும்.

யோவேல் 2:25 கூறுகிறது, "வெட்டுக்கிளி . . . பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்."

சங்கீதம் 51:12ல் "உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தரவேண்டும்" என்று வாசிக்கிறோம்.

உடைந்த நிலையில் இருந்தாலும், கர்த்தர் தம்முடைய கிருபையினால் நாம் மீண்டும் உயர பறப்பதற்கு இறக்கைகளைத் தருகிறார் என்பதை இந்த வசனங்கள் காட்டுகின்றன. வாழ்க்கையில் பல போராட்டங்களும் நெருக்கங்களும் இருந்தாலும், அவற்றைக் தாண்டி செல்லும்படி கர்த்தர் நமக்கு சிறகுகளைத் தருகிறார்.


ஏசாயா 40:31ல் “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்".

கர்த்தரை நம்புகிறவர்கள் கழுகுகளைப் போல சிறகுகளை அடித்து உயரப் பறப்பார்கள். கர்த்தரால், விசுவாசம், நம்பிக்கை மற்றும் அவர் விரும்பிய வாழ்க்கையை வாழ்வதற்கான சுதந்திரம் ஆகியவற்றின் புதிய இறக்கைகள் நமக்கு கொடுக்கப்படுகிறது.


Writer ----- Sis Chrstina shaji, Dubai


Transaltion-- Bro Jaya Singh


Mission Sagacity Volunteers

 
 
 

Recent Posts

See All
Encouraging Thoughts

*✨ Encouraging thoughts 😁* °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°• *★ Lessons from the book of Ruth – 3* *_"A woman who worked...

 
 
 
Encouraging Thoughts

*" കഴുകനെ പോലെ ഉയരാം"* പറക്കാനായിട്ട് ജനിച്ചിട്ട്, പറക്കാൻ കഴിയാതെ ഭൂമിയിൽ ബന്ധിക്കപ്പെട്ട ഒന്നാണ് ചിറകില്ലാത്ത പക്ഷി. പൂർണത ഇല്ലാത്ത...

 
 
 
Encouraging Thoughts

प्रेरणादायक विचार 😁 °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°• ★ रूत की किताब से सबक - 2 "एक दोस्त जो चिपका रहा" (रूत 1:6-22) कुछ दोस्त...

 
 
 

Comments


bottom of page