Encouraging Thoughts
- kvnaveen834
- 1 day ago
- 1 min read
*✨ ஊக்கமளிக்கும் சிந்தனைகள் ✨*
°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•
*★ ரூத் புத்தகத்திலிருந்துள்ள பாடங்கள் – 6*
_*“போவாஸ்: மீட்பராகிய கிறிஸ்துவின் ஒரு முன்னடையாளம் ”*_
(ரூத் 4)
ரூத் புத்தகத்தின் இறுதி அத்தியாயத்தில், மீட்பின் அழகிய சித்திரத்தை நாம் காண்கிறோம். ஒரு அன்புள்ள, உன்னத மனிதரான போவாஸ், ரூத் மற்றும் நகோமியின் குடும்பத்தினர்களை மீட்பதற்கு விலை கொடுக்க ஆயத்தமாக இருக்கிறார். நீதியும் கருணையும் நிறைந்த அவரது இந்த செயலானது, போவாசைவிட பெரிய மீட்பராகிய - கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை - நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
போவாஸ் உலகப்பிரகாரமான விலைக்கிரயத்தை கொடுத்து மீட்டார், ஆனால் இயேசு கிறிஸ்துவோ விலைமதிப்பற்ற ஒன்றால் நம்மை மீட்டார் - அவருடைய விலைமதிப்பற்ற சொந்த இரத்தம். போவாஸ் தனது காலணியைக் கொடுத்து ஒப்பந்தத்தை முத்திரையிட்டார், ஆனால் நம்மை பாவத்திலிருந்து மீட்கும்படியாக இயேசுகிறிஸ்து தனது சொந்த உயிரைக் கொடுத்தார். போவாஸ் ஒரே ஒரு வீட்டாரை மட்டும் மீட்டார், ஆனால் இயேசு கிறிஸ்துவோ முழு உலகத்தையும் மீட்டார்.
ரூத் சொந்தமாக தன்னை மீட்டுக்கொள்ள முடியாதது போல, நாமும் நம் பாவங்களிலிருந்து சுயமாக நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. மீட்பு கிடைக்கவேண்டுமானால் நமக்கு ஒரு மீட்பர் தேவையாக இருக்கிறது - விருப்பமுள்ள, திறமையான, தகுதியான ஒருவர் மட்டுமே மீட்க முடியும். அது இயேசு கிறிஸ்து மட்டுமே.
இயேசுகிறிஸ்துவுடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் பாவமன்னிப்பையும், புதிய வாழ்க்கையையும், தேவனுடன் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட உறவையும் வழங்குகிறார்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
அதை பெற்றுக்கொள்ள முயற்சிகள் வேண்டாம், அதற்காக உழைக்க வேண்டாம் - ஆனால் முழுமையாக நம்புங்கள்.
ரூத் போவாஸை நம்பியது போல, நாமும் இயேசு கிறிஸ்துவை முழுமையாக நம்ப வேண்டும், பாவத்திலிருந்து திரும்பி அவரை நம்முடைய ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே எல்லாருக்கான மிகப்பெரிய மீட்பாக இருக்கிறது.
*📖 நினைவில் இருக்கவேண்டிய வசனம் 📖*
*எபேசியர் 1:7*
_“இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.”_
*🙏 ஜெபம் 🙏*
கிருபையுள்ள எங்கள் பரலோக பிதாவே,
போவாசிடம் காணப்பட்ட மீட்பின் அழகிய படத்திற்காகவும், உமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மூலம் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய மீட்பிற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் இரட்சிப்புக்காக அவர் தனது உயிரைக் கொடுத்ததற்காகவும், சிலுவையில் வெளிப்படுத்தப்பட்ட மிகுந்த அன்பிற்காகவும்,
நாங்கள் உம்மைப் துதிக்கிறோம். உம்மில் நம்பிக்கை வைக்கவும், பாவமன்னிப்பின் சந்தோஷத்தில் நடக்கவும், ஒவ்வொரு நாளும் நன்றியுடன் வாழவும் எங்களுக்கு உதவி செய்யும்.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம், ஆமென்.
✍️ ✍️ ✍️--- Sis Shincy Jonathan, Australia 🇦🇺
Transaltion- Bro Jaya singh

Comments