Encouraging Thoughts ( Tamil)
- kvnaveen834
- Oct 16, 2024
- 2 min read
✨ *ஊக்கமளிக்கும் சிந்தனைகள்* 😁
°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°••°•°•
★ *யோசேப்பின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் -பாகம் 7*
*_நீங்கள் பலிசெலுத்த ஆயத்தமா?_*
*ஆதியாகமம் 39: 11-20*
11. இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டுக்கு போனான்; வீட்டு மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை.
12. அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்.
13. அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது,
14. அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரெய மனுஷன் நம்மிடத்தில் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படிக்கு என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டேன்.
15. நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள்.
......
......
_20 யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்.._
இந்த வேதப்பகுதியில், போத்திபாரின் மனைவியினால் சோதிக்கப்பட்டபோது, யோசேப்பு தன்னுடைய வஸ்திரத்தை விட்டுவிட்டு ஓடிப்போகிறான். தன்னுடைய கவுரவத்தை காப்பாற்ற தீர்மானத்தினால் அவன் சிறைச்செல்ல நேர்ந்தது. ஆனால் கர்த்தருக்கு முன்பாக காணப்பட்ட அவனுடைய உததமமானது நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுத்தருகிறது. சிலவேளைகளில் சரியான காரியங்களை செய்ய சில தியாகங்களை சகிக்க வேண்டும்.
நேர்மையாக வாழவேண்டுமானால் பெரிய தியாகங்களை சகிக்க வேண்டும். மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிட்டாலும், விசுவாசிகளும் யோசேப்பைபோல கர்த்தருக்கு ஏற்ற தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்துவின் சீஷனாக இருப்பதற்கு செலுத்தவேண்டிய விலையை குறித்து லூக்கா 9.23ல் இவ்வாறாக சொன்னார். "பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்". சிலுவையை சுமப்பது என்பது விசுவாச வாழ்க்கை வாழ்வதற்காக சகிக்கும் தியாகங்களை குறிக்கிறது. உலகம் நமக்கு முன்பாக வைக்கிற சோதனைகள், சவால்கள் மற்றும் சமரசத்திற்கான வாய்ப்புகளை நமக்கு முன்பாக வைத்தாலும், ஒரு உண்மையான கிறிஸ்துவின் சீடராக இருப்பவர்கள் எவ்வளவு விலைகொடுத்தும் இந்த சோதனையை எதிர்த்து நிற்பார்கள்.
சீஷர்களை அழைத்த விதத்தை சற்று சிந்தித்து பாருங்கள். மத்தேயு 4:18-22ல், தங்களுடைய வலைகளை விட்டுவிட்டு இயேசு கிறிஸ்துவை பின்பற்றி வந்த சீமோன் பேதுருவையும் அந்திரேயாவைக் குறித்தும் வாசிக்கிறோம். தங்களுடைய குடும்பத்தையும் வாழ்வாதாரத்தையும் விட்டுவிட்டு அவருடைய அழைப்பிற்கு கீழ்ப்படிந்து வந்தார்கள். இது அவர்களுடைய மிகப்பெரிய தியாகமாக இருந்தது. ஆனால் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவதினால் இந்த வலைகளினால் கிடைக்காத நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும் என்று அறிந்திருந்தார்கள். அதுபோல யாக்கோபும் யோவானும் தங்கள் தகப்பனை விட்டுவிட்டு இயேசு கிறிஸ்துவில் தங்களுடைய எதிர்கால நம்பிக்கையை வைத்து அவரை பின்பற்றினார்கள். சரியான காரியத்தை பின்பற்றும்படி அவர்கள் முடிவு செய்ததை அவர்களுடைய செயல்களிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
அது மிகவும் எளிதான காரியமல்ல ஆனால் நினைவில் கொள்ளுங்கள், இந்த தற்காலிக துன்பம் மற்றும் இழப்பை விட கர்த்தர் கொடுத்த வெகுமதி மிக அதிகம். யோசேப்பின் சரித்திரம் சிறையில் முடிவடையவில்லை. நாளடைவில் யோசேப்பு எகிப்தின் ஆளுநராக, பஞ்சத்திலிருந்து ஜனங்களை காப்பாற்றுகிறவராக உயர்த்தப்பட்டார். சீஷர்களும் ஆதித்திருச்சபையின் அஸ்திபாரமாகவும், சுவிசேஷத்தை பிரசங்கிறவர்களாகவும், கர்த்தருடைய ராஜ்யத்தின் வளர்ச்சிக்காக செயல்பட்டார்கள்.
முடிவாக, கிறிஸ்தவ வாழ்வில் தியாகம் மிகவும் முக்கியமானது. நம்முடைய சொந்தங்களை, விருப்பங்களை, சொத்துக்களை விட்டுவிடுவதும் உள்ளடங்கியது. மாற்கு 10.29,30 வசனத்தில் வாசிப்பதை போல எதையாகிலும் விட்டவன் நூறத்தனையாக, இம்மையிலும் மறுமையிலும் பெற்றுக்கொள்வான்.
*📖 இந்த நாளுக்கான வசனம் 📖*
* லூக்கா 9:24*
தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
✍️ ✍️ ✍️ Sis Shincy Jonathan Australia 🇦🇺
Translation by --- Br Jaya Singh
Comments