top of page

Encouraging Thoughts ( Tamil)

✨ *ஊக்கமளிக்கும் சிந்தனை* 😁

°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•

★ *யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்- 9*


_*"தேவன் அதை நன்மையாக முடியப்பண்ணினார்"*_

 

*ஆதியாகமம் 45; 50: 15-21*


இங்கே, இந்த வேத பகுதிகளில், யோசேப்பு தனது சகோதரர்களுக்கு தன்னை வெளிப்படுத்துவதை நாம் காண்கிறோம், மேலும் இந்த வசனங்களுக்குள், யோசேப்பிடம் உள்ள குறிப்பிடத்தக்க குணங்களை நாம் காண முடிகிறது-அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை, பணிவு, மன்னிக்கும் குணம், ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவனுடைய கரத்தைப் பார்க்கும் பண்பு போன்றவை. இந்த பண்புகள் துன்பங்களுக்கு அவரது பதிலை வடிவமைத்தது மட்டுமல்ல, நம் சொந்த வாழ்க்கையில் பின்பற்றுவதற்கு மதிப்புமிக்க படிப்பினைகளையும் வழங்குகிறது.


தன் சகோதரர்களால் வெறுக்கப்பட்டு அடிமையாக விற்கப்பட்டதிலிருந்து எகிப்தில் ஆட்சியாளராக மாறுகிற நேரம் வரையுள்ள யோசேப்பின் பயணம் அவருடைய வார்த்தைகளின் ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறது: "நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ,... அதை நன்மையாக முடியப்பண்ணினார்" (ஆதியாகமம் 50:20).


வாழ்க்கையைப் பற்றிய யோசேப்பின் கண்ணோட்டம் அசாதாரணமானது. துரோகம், பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் சிறைவாசம் ஆகியவற்றின் வலியை மட்டுமே பலர் பார்க்க முடியும் என்றாலும், தேவனுடைய கைகள் யோசேப்புக்காக வேலை அவர் செய்வதைக் கண்டார். யோசேப்பு தனது துன்பங்களைப் பற்றிக் கவலைப்படுவதற்குப் பதிலாக, ஒவ்வொரு நிகழ்வும், எவ்வளவு வேதனையானதாக இருந்தாலும், நன்மையைக் கொண்டுவருவதற்கான தேவனுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதை யோசேப்பு உணர்ந்தார். இந்த மனநிலை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக உணர்ந்தாலும், கர்த்தரின் இறையாண்மையில் நம்பிக்கை வைக்க கற்றுக்கொடுக்கிறது.


யோசேப்பின் தனித்துவமான குணத்தை பிரதிபலிக்கும் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்பது தனது சகோதரர்களை மனப்பூர்வமாக மன்னித்ததாகும். அவர்கள் தன்னை வெறுத்தும், துரோகத்துக்கு ஆளாக்கியும், தன்னை அடிமையாக விற்றும், பல ஆண்டுகள் துன்பத்தை ஏற்படுத்தியும் , யோசேப்பு தனது மனதில் எந்த விரோதத்தையும் வைத்துக்கொள்ளவில்லை.


ஆதியாகமம் 45-ஆம் அதிகாரத்தில், அவர் தனது சகோதரர்களை நம்பிக்கையுடன் உறுதிபடுத்துகிறார்:

"என்னை இங்கு அனுப்பியது நீங்கள் அல்ல, தேவனே!"


அவன் அவர்களை மன்னித்தது மட்டுமல்ல, மிகுந்த கனிவுடன் அவர்களுக்கு உதவினான். எகிப்தின் சிறந்த பொருள்களை வழங்கி, அவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் பராமரிப்பதாக வாக்களித்தான். அவனது செயல்கள் தீமையை நன்மையால் வெல்லும் ஒரு தன்மையை காட்டுகின்றது, மேலும் தேவனின் திட்டங்கள் மனிதர்களின் தவறுகளைவிட உயர்வானவை என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது.


யோசேப்பின் வெற்றிக்காக தேவனை பாராட்டிய முறையில் அவனது தாழ்மை தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு ஆசீர்வாதமும் முன்னேற்றமும் அவரால் வடிவமைக்கப்பட்டது என்பதை அவன் ஒப்புக் கொண்டான்.


யோசேப்பின் வாழ்க்கையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், அவர் தீமையை நன்மையால் எப்படி கடந்து வந்தார் என்பதாகும். அவரது சகோதரர்கள் அவரின் பலவண்ண உடையை—விசேஷ நேசத்தின் அடையாளமாக இருந்ததை— அவனிடமிருந்து பறித்தனர், ஆனால் யோசேப்பு அவர்களுக்கு புதிய உடைகளை வழங்கினார், இது சமாதானத்தையும் தயையையும் குறிக்கிறது. அவர்கள் அவரைக் கொன்று விட நினைத்தார்கள், அவரை ஒரு குழியில் தள்ளினர், ஆனால் யோசேப்பு அவர்களை நம்பிக்கையுடன் உயர்த்தி, மன்னிப்பு மற்றும் பராமரிப்பை வழங்கினார்.


யோசேப்பின் அறிவிப்பு, "தேவனோ,... அதை நன்மையாக முடியப்பண்ணினார்," நம் சூழ்நிலைகள் எவ்வளவு மோசமாகத் தோன்றினாலும், கர்த்தர் அவற்றைத் தம் மகிமைக்காகவும் நம் நன்மைக்காகவும் பயன்படுத்த முடியும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. கர்த்தருடைய நேரத்தை நம்பவும், நமக்குத் தவறு செய்பவர்களை மன்னிக்கவும், அவருடைய உயர்ந்த நோக்கத்தில் கவனம் செலுத்தவும் அவருடைய வாழ்க்கை நம்மை ஊக்குவிக்கிறது.


யோசேப்பின் வாழ்க்கை பயணமானது, கட்டுப்பாட்டை மீறியதாக தோன்றினாலும், கர்த்தர் எப்போதும் செயல்பாட்டில் இருக்கிறார், மீட்பு மற்றும் கருணையின் கதையை எழுதுகிறார் என்று நமக்கு நினைபூட்டுகிறது.


*📖 இன்றைக்கான வசனம் 📖*

*ரோமர் 8:28*

_"அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்."_


*ரோமர் 12:21*

_"நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு."_

🙏🙏🙏🙏🙏🙏🙏



✍️ ✍️ Sis Shincy Jonathan Australia 🇦🇺

Translation: Sis Tephila Mathew

Mission sagacity Volunteers

 
 
 

Recent Posts

See All
Encouraging Thoughts

परीक्षा सहने वाला मनुष्य धन्य है!! जीवन में ऐसा कोई नहीं जिसके सामने प्रतिकूलताएँ और संकट न आए हों। प्रलोभन, चुनौतियाँ, संदेह के क्षण,...

 
 
 
Encouraging Thoughts

*Blessed is the one who remains steadfast under trial!* No soul is exempt from the adversities and hardships that life presents....

 
 
 
Encouraging Thoughts

പരീക്ഷ സഹിക്കുന്ന മനുഷ്യൻ ഭാഗ്യവാൻ !! ജീവിതത്തിൽ പ്രതികൂലങ്ങളും, പ്രതിസന്ധികളും ഇല്ലാത്ത ആരുമില്ല. പ്രലോഭനങ്ങൾ, വെല്ലുവിളികൾ,...

 
 
 

Comentários


bottom of page