Encouraging Thoughts [ Tamil]
- kvnaveen834
- 4 days ago
- 1 min read
*✨ மரணம் முறியடிக்கப்பட்டது ✨*
மரணம் என்பது மனுக்குலத்தின் மிகப்பெரிய அச்சங்களில் ஒன்றாகும். "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6:23) என்று வேதாகமம் நமக்குச் சொல்கிறது. பாவத்தின் காரணமாக, மனினுக்குலம் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டு தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள எந்த நம்பிக்கையும் இல்லை.
ஆனால் தேவன், தமது மிகுந்த அன்பினாலும் இரக்கத்தினாலும், இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பினார். அவர் கல்வாரி சிலுவைக்குச் சென்று, நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை ஏற்றுக்கொண்டு, நமது பாவங்களை அவரே சுமந்தார்.
அவர் மரித்ததினால் நாம் வாழ்கிறோம்.
அவர் உயிர்த்தெழுந்ததினால் நாம் நித்திய ஜீவனைப் பெற்றோம்.
இயேசுகிறிஸ்து மரித்த பிறகு உயிர்த்தெழாமல் இருந்திருந்தால், நமது விசுவாசம் வீணாயிருக்கும். ஆனால் கல்லறை காலியாக இருக்கிறது! பாவத்திற்கான விலை செலுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் மரணம் தோற்கடிக்கப்பட்டது, மேலும் அவரை விசுவாசிக்கும் ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் நம்பிக்கை உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில், இயேசுகிறிஸ்து வெற்றியுடன் உயிர்த்தெழுந்தார், ஆகவே கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என்பது வருடத்திற்கு ஒருமுறை நினைவுகூர வேண்டிய ஒரு காரியம் மட்டுமல்ல — அதுவே நமது நம்பிக்கையின் அஸ்திபாரம். ஆனால், இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையானது, உண்மையாகவே இரட்சிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே உரியதாகும். நம்முடைய பழைய பாவ வாழ்க்கை மரிக்க வேண்டும், மேலும் நமது இருதயம் அவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான், 'நாம் மரித்தாலும், உயிரோடு இருப்போம்' என்ற இந்த வாக்குத்தத்தத்தில் உண்மையாகவே களிகூர முடியும்.
*📖 நினைவுகூரவேண்டிய வசனம் 📖*
* யோவான் 11:25*
_“இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;”_
✍️ ✍️ ✍️ ✍️ Sis Shincy Jonathan, Australia 🇦🇺
Transaltion by # Bro Jaya Singh
Mission Sagacity Volunteers

Comments