top of page
Writer's picturekvnaveen834

Missionary story

கிறிஸ்தவ உலகத்திற்கு ஏராளமான ஆசீர்வதிக்கப்பட்ட பாடல்களை அறிமுகம் செய்த ஆசீர்வதிக்கப்பட்ட தேவ தாசனாகிய வி. நாகலினுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு அனுபவம்.

"சமயமாம் ரதத்தில்" என்ற பாடலானது உலகிலுள்ள அனைத்து மலையாளிகளுக்கும் மிகவும் அறிமுகமான ஒரு பாடல். இந்த பாடலின் ஆசிரியர் வேறொருவருமல்ல, ஜெர்மனி தேசத்திலிருந்து நம்முடைய நாட்டிற்கு சுவிசேஷத்தை சுமந்து வந்த மதிப்பிற்குரிய வி. நாகல் என்பவராவார். ஏராளமானவர்களை இரட்சிப்பிற்குள் வழிநடத்திய இந்த தேவ மனிதனின் இரட்சிப்பின் அனுபவத்தைக் குறித்து நாம் பார்ப்போம்.

1867 நவம்பர் 3ம் நாளில் ஜெர்மனி நாட்டில் ஹெஸ்ஸன் நகரில் ஸ்டாம்ஹிம் என்ற கிராமத்தில் ஹென்றி பிட்டர் மற்றும் எலிசபெத்து மேரி என்பவர்களுடைய இரண்டாவது மகனாக வி. நாகல் பிறந்தார். அவருடைய பெற்றோர்கள் நெசவு தொழில் செய்தார்கள் என்று சரித்திரத்திலிருந்து அறிந்துகொள்கிறோம். ஏராளமான மேன்மைகள் ஒன்றும் இல்லாத, சாதாரமான நாட்களாக நாகலினுடைய ஒரு வாலிபகாலம் இருந்தது.

ஆனால் அவருடைய 8ம் வயதில் தன்னுடைய பெற்றோர்கள் இருவரும் மரித்துப்போனதினால் அவர் ஒரு அனாதையாக மாறிவிட்டார். அனாதையான இந்த வாலிபனை ஒரு குடும்பத்தினர் தத்தெடுத்தார்கள். அந்த குடும்பத்தினர்கள் லூத்தரன் சபையின் அங்கத்தினர்களாக இருந்தார்கள். எல்லா கூட்டங்களிலும் தவறாமல் பங்குபெறும்படியாக பழக்கப்படுத்தினார்கள். அன்பும் நல்மனதும் உதவும் குணமுள்ள ஒரு நபராக அவர் வளர்ந்தார்.

1885ல் ஹெஸ்ஸன் நகருக்கு வருகை தந்த ஒரு நடமாடும் சுவிசேஷகனை சந்தித்ததுதான் நாகலின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. நாகலுக்கு 18ம் வயதானபோது ஒரு நடமாடும் சுவிசேஷகன் நாகலினிடம் வந்தார். அவர் யார் என்றோ எங்கிருந்து வந்தார் என்றோ எந்த ஊரை சேர்ந்தவர் என்றோ யாருக்கும் எந்த தகவலும் இதுவரையிலும் இல்லை. அவர் ஒரு செருப்பு தைப்பவர் என்று சொல்லப்படுகிறது. இதுவரையிலும் இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வராத நாகல் என்ற வாலிபனை கவர்ந்தது. ஒழுங்காக தேவாலயத்திற்கு செல்லவும், நல்ல மாதிரியுள்ள வாழ்க்கை வாழ்ந்தும், தன்னுடைய பாவங்களுக்கு பரிகாரம் வரவில்லை என்பதை புரிந்துகொண்ட அந்த வாலிபன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வழியாக இரட்சிப்பை பெற்றுக்கொள்ளவும் பாவமன்னிப்பை பெற்றுக்கொண்டவனாக மாறவும் அந்த எளிய சுவிசேஷகன் காரணமாக இருந்தார். அதுமுதற்கொண்டு நாகல் என்ற நபருடைய வாழ்வில் இயேசு கிறிஸ்துவுக்கு இடம் கிடைத்தது. இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தத்தினால் பாவங்கள் கழுவப்பட்டு சுத்தீகரிக்கப்பட்ட அனுபவம் அவருக்கு உண்டானது. பிறகு நாகல் அவர்கள் தானே இந்த அனுபவத்தைக் குறித்து குறிப்பிட்டிருக்கிறார்.

வன் க்றீய என்னில் நடந்நு

கர்த்தனென்றே ஞான் அவன்றே

தான் விளிச்சு ஞான் பின் செந்நு

சுவீகரிச்சு தன் சப்தத்தே

பாக்யநாள் . . . பாக்யநாள்

இயேசு என் பாவம் தீர்த்தநாள்

இந்த செருப்பு தைக்கும் நபரான எளிய மனிதன், எங்கெல்லாம் செல்ல முடியுமோ, அங்கெல்லாம் சென்று யாரோடெல்லாம் சுவிசேஷம் அறிவிக்க முடியுமோ, அந்த வாய்ப்புக்களை எல்லாம் அவர் பயன்படுத்தினார். அதன் பலனாக, அநேக வருடங்களுக்கு பிறகு வி. நாகல் என்ற தேவ மனிதர், இந்திய மண்ணில் சுவிசேஷத்துடன் வந்து அநேகரை இரட்சிப்பிற்கு நேராக நடத்துவதற்கும் ஏதுவானது என்று நினைத்து நன்றியுடன் தேவனை துதிப்போம்.




Written by ✍️ ✨️: Sis Jancy Rojan

Translation by : Bro Jaya Singh

Mission sagacity

Volunteers

19 views0 comments

Recent Posts

See All

Encouraging Thoughts ( Tamil)

★ *புத்தாண்டுக்கான புத்தம் புதிய ஆடை!* ஏதாவது ஒரு புதியதின் யோசனை யாருக்கு தான் பிடிக்காது? புதிய ஆடை, புதிய தொடக்கம், அல்லது சுத்தமான...

Encouraging Thoughts ( New Year)

✨ *പ്രോത്സാഹജനകമായ ചിന്തകൾ* 😁 °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°• ★ *പുത്തൻവർഷത്തിനായുള്ള ഒരു പുത്തൻ വസ്ത്രം!* പുതിയ...

New year ( Encouraging Thoughts)

✨ *Encouraging thoughts* 😁 °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°• ★ *A Brand-New Outfit for a Brand-New Year!* Who doesn’t love the idea...

Comments


bottom of page