top of page

Missionary story

மிஷனரி வரலாறு

ரெனார்ட் போன்கே

பிறப்பு : 1940

இறப்பு : 7 -12 -2019

பிறந்த இடம் : ஜெர்மனி

தரிசன இடம் : ஆப்பிரிக்கா

ஒரு 9 வயது சிறுவனின் தாய் அவனிடம் அவன் செய்த பாவம் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்டு இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டார். 10 வயதில், ஆப்பிரிக்காவில் மிஷனரி பணிக்கான கர்த்தரின் அழைப்பைப் புரிந்துகொண்டார். இந்த சிறுவன் பின்னர் அந்த அழைப்பிற்கு கீழ்ப்படிந்து, பின்னர் அவர் ஆப்பிரிக்காவின் பில்லி கிரஹாம் என்று அறியப்பட்டார். அவர் பெயர் ரெனார்ட் போன்கே. அவர் ஒரு சிறிய கிராமத்திற்கு சென்று அங்கு உள்ள ஒரு உள்ளூர் சபையில் ஊழியம் செய்தார். 'நரகத்தைக் கொள்ளையடித்து, சொர்க்கத்தைப் பிரபலமாக்குவோம்' என்ற முழக்கத்துடன் தனது ஊழியத்தைத் தொடங்கினார். அப்போது அங்கு கடுமையான வேலை பற்றாக்குறை ஏற்பட்டு குற்றங்கள் அதிகரித்தன. எனவே, அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க இளைஞர்களைப் பயன்படுத்தினார். கட்டிடங்கள் கட்டுவது அவரது விருப்பமாக இருந்தது, விசுவாசத்தால் கூட்டங்களை நடத்த பெரிய இடங்கள் வாடகைக்கு விடப்பட்டன.

ஆரம்பத்தில் ஏமாற்றமாக இருந்தது, ஆனால் மிக விரைவில் எழுந்த எழுப்புதல் நெருப்பானது, தென்னாப்பிரிக்காவில் பரவி, தேவன் அவருடைய வாயை கட்டுப்படுத்தி மற்றும் பரிசுத்த ஆவியானவரானவர் ஆறுதல், வழிகாட்டி மற்றும் வலிமையின் ஆதாரமாகவும் செயல்பட்டார். நாம் இயேசு கிறிஸ்துவின் மகத்தான கட்டளையை நிறைவேற்ற இரவும் பகலும் முயற்சி செய்கிறோமா? இல்லையென்றால், இந்தக் கதை உங்களுக்குள் பரலோக நெருப்பைப் பரப்பட்டும். அவர் எரியும் நெருப்பாகவும், அணையாத உற்சாகமாகவும் இருந்த தேவனுடைய வார்த்தைகளால் ஹைஸ்கூல் ஆல் நேஷன்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கி 9 நாடுகளில் பணியாற்றத் தயாராகிவிட்டார். ஆயிரக்கணக்கானவர்களை கர்த்தருக்குள் வழி நடத்தின மாபெரும் மிஷனரி 79 வயதில் தனது பரலோக வீட்டிற்குச் சென்றார்.

இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை உங்களை ஊக்குவிக்கட்டும்.



Missionary story

Reynard Bonnke

Written by Bro. Lijoice c Jose Uk

Translation: Tephilla Mathew

Mission sagacity Volunteers

Tamil version

 
 
 

Recent Posts

See All
Encouraging Thoughts [ Tamil]

✨ *ஊக்கமளிக்கும் சிந்தனைகள் * ✨ °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•° *பர்னபாவைப் போல் - ஊக்கமளிக்கும் மகன்கள் மற்றும் மகள்களாக இருப்போம்* பர்னபா என்பவர் "ஆறுதலின் மகன்" (அப்போஸ்தலர் 4:36) என்று அழைக்

 
 
 
Encouraging Thoughts

✨ *പ്രോത്സാഹജനകമായ ചിന്തകൾ* ✨ °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•° *നമുക്ക് പ്രോത്സാഹിപ്പിക്കുന്ന മക്കളാകാം -ബർണബാസിനെ മാതൃകയാക്കാം* ബർണബാസിനെ “ആശ്വാസത്തിന്റെ പുത്രൻ” (പ്രവൃത്തികൾ 4:36) - 'പ്രോത്സാഹനത്തി

 
 
 
Encouraging Thoughts

प्रोत्साहन भरे विचार ✨ °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•° आइए हम बरनबास की तरह बनें - प्रोत्साहन के पुत्र और पुत्रियां बरनबास को "सांत्वना का पुत्र" (प्रेरितों के काम 4:36) कहा गया था — यानी प्रोत्

 
 
 

Comments


bottom of page