ஊக்கமூட்டுகிற சிந்தனைகள்
°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°••°•°•
★ யோசேப்பின் வாழ்க்கையிலிருந்துள்ள பாடங்கள் - 1
ஆதியாகமம் 37: 2-11
2. யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.
3. இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.
4. அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.
5. யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.
6. அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்:
7. நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான்.
8. அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம் பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.
9. அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.
10. இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான்.
11. அவன் சகோதரர் அவன்மேல் பொறாமை கொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.
இந்த பகுதியில் யோசேப்பு இளைஞனாக இருந்தாலும், விடாமுயற்சியுடன் தனது சகோதரர்களுடன் இணைந்து பணியாற்றுவதையும், அவனுடைய பொறுப்பையும் அர்ப்பணிப்பையும் காண்கிறோம். இந்த இளவயதிலும் அவன் தன்னுடைய வேலைகளை மிகவும் கவுரவமாக செய்தான். எந்த வயதானாலும் எப்படிப்பட்ட வேலையானாலும் நம்முடைய பொறுப்புக்களை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். சுறுசுறுப்பாக செயல்படுபவர்கிறவர்களை கர்த்தர் பயன்படுத்துகிறார். நாம் சோம்பேரிகளாக காணப்படாமல் இருக்க கர்த்தர் கிருபை செய்வாராக.
தன்னுடைய சகோதரர்கள் செய்கிற துன்மார்க்கமான காரியங்களை குறித்த தகவல்களை தன்னுடைய தகப்பனுடைய கவனத்திற்கு கொண்டு வந்த செயலானது, தவறான காரியங்களை சரியான நேரத்தில் நாம் சரியாக கையாள வேண்டும் என்று நம்மை நினைப்பூட்டுகிறது . தவறான காரியங்களை கண்டும் காணாதவர்களாக இருக்கக்கூடாது என யோசேப்பினுடைய பொறுப்புணர்வு நமக்கு கற்றுத் தருகிறது. தேவனுடைய பார்வையில் உண்மை உள்ளவர்களாகவும் சரியானதை செய்கிறவர்களாகவும் நிற்க கர்த்தர் கிருபை செய்வாராக.
யோசேப்பின் சரித்திரமானது நம்முடைய சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் உள்ள வல்லமையை விளக்குகிறது. அவனுடைய வார்த்தைகளும் அவனுடைய சொப்பனங்களும், அவனுடைய தகப்பன் அவனை அதிகமாக நேசித்தது போன்ற காரியங்களால் அவனுடைய சகோதரர்கள் அவனை அதிகமாக பகைக்க காரணமாக மாறியது. அவர்களுடைய பகை நிமித்தமாகவும் பொறாமை நிமித்தமாகவும் தங்களுடைய சகோதரனாகிய யோசேப்பிடம் கனிவாக பேசமுடியவில்லை. நமது செயல்களையும், ஐக்கியத்தையும் நம்முடைய மனநிலையானது எப்படி மாற்றுகிறது என்பதை கற்றுத் தருகிறது. மற்றவர்களுடைய வாழ்வில் உள்ள நல்ல குணங்களை காணவும் மற்றவர்களுடன் நல்ல ஐக்கியமும் உடையவர்களாக செயல்பட கர்த்தர் நமக்கு கிருபை செய்வாராக.
தெரிந்து கொள்வதற்கு
¶ வயதை பாராமல் கடின உழைப்பையும் பொறுப்புணர்வையும் பாராட்டுங்கள்
¶ தவறான செயல்களை நேர்மையுடன் எடுத்துக் கூறுங்கள்
¶ நேர்மறை எண்ணங்களையும் நல்ல அணுகுமுறையையும் உருவாக்கிக் கொள்ளுங்கள்
இந்த நாளுக்கான வசனம்
பிலிப்பியர் 4:8
கடைசியாக, சகோதர சகோதரிகளே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
பிலிப்பியர் 4:8
🙏🙏🙏🙏🙏🙏🙏
Written by ✍️:: Sis Shincy Susan
Translation by : Bro Jaya Singh
Mission sagacity Volunteers
Tamil language
Comments