அறிவுக்கெட்டாத அன்பு
ரோமர் 8:32
தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?
இந்த வசனத்தை வாசித்துக் கொண்டிருக்கும்போதே, இந்த கேள்வி என்னை பாதித்தது. அப்பா, உங்களால் அதிகமாக நேசிக்கப்பட்டவரை இழந்து, பாவிகளை உயிர்ப்பிக்க உங்களைத் தூண்டியது எது? ஆம்! இதற்கு ஒரு துல்லியமான பதில் இல்லை. இதற்குரிய தர்க்கரீதியான காரணத்தையும் வழங்க இயலாது. நம்மை கொஞ்சமும் கண்டுகொள்ளாத ஒருவரை காப்பாற்றும்படியாக, நம் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒருவரை விட்டுக் கொடுப்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்க்க முடியுமா? இந்தக் கேள்விக்கு முடியாது என்று தான் பதில் சொல்ல வேண்டும். நிச்சயமாக முடியாது. என்னால் இதை செய்யவே முடியாது.
எத்தனை காலங்கள் வாழ்ந்தாலும் நம்மால் புரிந்துகொள்ள முடியாத அன்பை நமது அன்புக்குரிய பிதாவானவர் வெளிப்படுத்தினார். அந்த அன்பானது நம்முடைய சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் மேலானது. அவர் நம்மை நினைத்த போது, அவர் தமது மகன் என்று நினையாத அளவிற்கு இறங்கி வந்தார். யாருக்காக இந்த காரியங்களைச் செய்தார்? பரிதபிக்கப் படத்தக்கவர்களாகிய நமக்காக தான். அப்பா.. அதுதான் உங்களுடைய அன்பை பரவசமாகவும், தெய்வீகமாகவும், ஆச்சரியமாகவும் மாற்றுகிறது.
அன்புக்குரிய சகோதரர்களே,
நம்மைத் தமக்கு சொந்தமாக்கிக் கொள்ளும்படியாக மரணத்தின் எல்லை வரைச் சென்ற ஒரு தந்தையால் தான் நாம் நேசிக்கப்படுகிறோம். அப்படியானால் ஏன் கவலைப்படுகிறீர்கள்? இவ்வளவாக நம்மை நேசிப்பவர் எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் நமக்கு ஆதரவாக இருப்பார்.
எனவே, நம்பிக்கை இழந்து, சோகமாக இருக்க வேண்டாம். எப்பொழுதும் நம் தந்தையின் இயல்பான அன்பின் தன்மையைப் புரிந்துகொள்ளவும், அனைத்தையும் அவருடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கவும் முயற்சி செய்யுங்கள். அவருடைய சித்தத்தின்படி நடந்து, ஜெபியுங்கள். அவர் நிச்சயமாக நம்மை வழிநடத்துவார்.
✍️ ✍️ ✍️ written by - Sis Acsah Nelson
L✍️ ✍️ ✍️ ✍️ ✍️ ✍️ ✍️ Translation- Bro Jaya singh
Comentários