Special Thoughts
- kvnaveen834
- Dec 3, 2023
- 2 min read
மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?
பரிசுத்த வேதாகமத்தின் 18வது புத்தகத்தில், யோபு என்ற பக்தன் கேட்ட கேள்விக்கான பதிலை பரிசுத்த வேதாகமத்திலேயே கண்டடைவோம்.
கேள்விகள்:-
1️⃣ யோபு 14:4- அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ?
2️⃣ யோபு 14:10- மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?
3️⃣ யோபு 14:14- மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?
முதல் கேள்வியை ஆராய்வோம். மனிதனிடமிருந்து பிறந்த எல்லா மனிதர்களும் பாவிகள் என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. சங்கீதம் 148:6ல் 'அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்'. பிரமாணம் என்பது தேவனுடைய கட்டளை. முதல் மனிதர்களான ஆதாமும் ஏவாளும் பிரமாணத்தை மீறினார்கள்.
ஆதியாகமம் 1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக;
ஆதியாகமம் 2:7ல் தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, என்று பார்க்கிறோம்.
ஆதியாகமம் 2: 15-17 ல் தேவன் கொடுத்த கட்டளையை மனிதன் மீறினதைக் காணலாம். அதனால் மனிதன் ஆன்மீக மரணத்தை அனுபவித்தான்.
ஆதியாகமம் 6:6- தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
ரோமர் 5:12- இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.
சங்கீதம் 14:1-3 அதையே சொல்கிறது
ரோமர் 6:23- பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
பாவம் என்றால் என்ன? தேவன் செய்ய வேண்டாம் என்று சொல்வதை செய்வதும், செய் என்று சொல்வதை செய்யாமல் இருப்பதுமே பாவம்.
இரண்டாம் கேள்வி : யோபு 14:10- மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?
இந்த மண்ணில் பிறக்கும் மனிதர்கள் ஆண், பெண், நிறம், ஜாதி வேறுபாடு இன்றி இறப்பது உறுதி. ஆனால் மனிதன் இவ்வுலகில் எப்படி வாழ வேண்டும், அவன் இறந்த பிறகு என்ன நடக்கும் என்பதை பரிசுத்த வேதாகமம் தெளிவாகக் கூறியுள்ளது.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் இருந்தபோது மரித்துப்போன பலரையும் உயிர்ப்பித்திருக்கிறார்.
நானே வழியும் சத்தியமும் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
யோவான் 11:26- உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்;
பல வேத வசனங்களில் இருந்து நாம் உறுதியாகக் கூறக்கூடிய ஒரு உண்மை இருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற ஒருவரின் ஆன்மா நித்திய சொர்க்கத்தில் அல்லது பரலோகத்தில் இருக்கும். சிலுவை மரணத்தின் போது, இயேசு சிலுவையில் இருந்த ஒரு கள்ளனிடம், இன்று நீ என்னுடன் பரதீசிலிருப்பாய் என்று கூறுகிறார்.
இந்த வார்த்தைகளை பார்க்கும்போது, அன்பான நண்பரே,
ரோமர் 10:8- இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.
ரோமர் 10:9- என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஆமென்.
Written by-Bro Ayyappan
Translation by - Sis Tephila Mathew
Comments