தனது சகோதரர்களைப் பற்றிய நெகேமியாவின் எண்ணங்கள் மற்றும் அவர்களுக்காக அவர் செய்யும் ஜெபம்:
நெகேமியா 1:1,2
"இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசானென்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால், என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன்."
நெகேமியா ராஜாவின் பானபாத்திரக்காரனாயிருந்தார் என்பதை வசனம் 11ல் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம். அவர் ஒரு பெரிய பதவியில் இருந்தாலும், அவர் தனது சகோதரர்களான இஸ்ரவேல் புத்திரர் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். அவர் தனது பொறுப்பான வேலையின் மத்தியிலும் தனது சகோதரர்களின் துன்பங்களையும் கண்ணீரையும் பற்றி விசாரித்தார்.
'நான் சூசானென்னும் அரமனையில் இருக்கும்போது...' என்று 1:1 ல் காண்கிறோம். இந்த வாக்கியம் நெகேமியா தனது மக்களின் துன்பங்களைப் புரிந்துகொள்ள விரும்புவதைக் குறிக்கிறது.
நெகேமியா இஸ்ரவேல் புத்திரரைப் பற்றி கேள்விப்பட்ட செய்தியால் மிகவும் வருந்தினார் என்பதை நான்காவது வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நெகேமியா பரலோகத்தின் தேவன் முன் மண்டியிட்டார்.
கலாத்தியர் 6:2 ல் 'ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து' என்று பார்க்கிறோம்.
யாக்கோபு 5:16 லே 'ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்' என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அன்பான தேவ பிள்ளைகளே, நெகேமியாவைப் போல நாமும் நம் சகோதரர்களின் துன்பத்திலும், கண்ணீரிலும், துக்கத்திலும் அவர்களின் விவகாரங்களைத் தேடி, அவர்கள் மத்தியில் இறங்கி செல்வோமாக. அவ்வாறு, நம் சகோதரர்களின் சுமைகளைச் சுமப்பதன் மூலமும், தேவனுடைய அன்பில் ஒருவரையொருவர் மன்னித்து மறப்பதன் மூலமும் தேவ நாமம் மகிமைப்படுத்தப்படட்டும்.
🙏 ஆமென் 🙏
தொடரும்...
Written ✍️✍️✍️✍️Brother Ayyappan Aluva
Translation: Sister Tephila Mathew
Comments