🌹ஊக்கமளிக்கும் சிந்தனை🌹
°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•
*சுகமாக்கின விசுவாசம்
மாற்கு 2:1-12
3 - அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்;
4 - ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.
5 - இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
..........
..........
10 - பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி திமிர்வாதக்காரனை நோக்கி:
11 - நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
12 - உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்குமுன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் சுகமாக்கப்பட்ட திமிர்வாதக்காரனைக் குறித்து இந்த பகுதியில் வாசிக்கிறோம். அவனுடைய தனிப்பட்ட விசுவாசத்தின் அடிப்படையிலா அவன் சுகம்பெற்றான்? இல்லை. அவனை சுமந்து வந்த நான்கு நண்பர்களுடைய விசுவாசத்தை கண்டு தான் சுகப்படுத்தினார்.
அவனை இயேசு கிறிஸ்துவிடம் கொண்டுவருவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அவனை வாசல் வழியாக கொண்டு வரமுடியாததால், மேல்கூரையை பிரித்து திறப்பாக்கினார்கள். அவர்கள் அவனை வீட்டிற்குள் இறக்கி விட்டதால் அவன் சுகமாக்கப்பட்டான். இதற்காக அவர்களுடைய முயற்சி, ஆரோக்கியம் மற்றும் நேரத்தை அதிகமாக செலவிட்டார்கள். திமிர்வாதக்காரனான மனிதனுடைய உண்மையான நண்பர்கள், தங்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தினார்கள்.
உங்களுடைய நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள். அவர்கள் உங்களை இயேசு கிறிஸ்துவிடம் அழைத்து சொல்கிறார்களா அல்லது அவரிடமிருந்து உங்களை பிரித்து விடுகிறார்களா? உண்மையான உதவியாளரிடம் உங்களை அழைத்து செல்லும்படியாக அவர்கள் ஏதாவது முயற்சி எடுக்கிறார்களா?
தேவனை நேசிக்கிறவர்களும் அவருடன் நேரம் செலவிட விரும்புகிற நண்பர்களைத் தான் நண்பர்களாக தெரிவு செய்யவேண்டும்.
அதுபோல, நாமும் நல்ல நண்பர்கள் என்பதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் தேவனிடம் வருவதற்கு உதவி செய்கிறோமா, அல்லது நம்முடைய நேரத்தை உலக இன்பங்களுக்காக மட்டுமே செலவு செய்கிறோமா?
இந்த திமிர்வாதக்காரனின் பாவங்களையும் இயேசு கிறிஸ்து மன்னித்துவிட்டார். உடலில் உருவாகும் வியாதிகளுக்கான சிகிச்சைகள் நம்மிடம் உண்டு. பாவமானது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டும் தான் குணமாக்கப்பட முடியும். நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரிப்பதற்காக தேவன் அவரை அனுப்பினார். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவருடைய பலிமரணத்தில் விசுவாசித்து, அவரை நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாக ஏற்றுக்கொள்வதன் மூலம் நமக்கு இரட்சிப்பு கிடைக்கிறது.
உங்களுடைய பாவத்திலிருந்து ஆவிக்குரிய விடுதலையை இன்னும் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால், நீங்கள் நல்ல தீர்மானம் செய்ய கர்த்தர் உங்களுக்கு உதவிசெய்வாராக.
எடுத்துச் செல்ல:
~மற்றவர்களை இயேசு கிறிஸ்துவிடம் வழிநடத்தும் நல்ல நண்பர்களாக இருங்கள். தேவனிடமிருந்து உங்களை பிரிக்கும் நண்பர்களை தேர்வு செய்யாதீர்கள்.
~இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவிடம் திரும்பி வாருங்கள். உங்களுடைய சரீர மற்றும் ஆவிக்குரிய சுகத்திற்காக தேவனை தேடும்படி கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக.
இந்த நாளுக்கான வசனம்:
1யோவான் 1.7
"அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்"
Thought by sis. Shincy
Translation : br. Jaya Singh
Comentários