top of page

சாராள், கீழ்ப்படிதலுள்ள மனைவி -பகுதி 1

*சாராளின் வாழ்க்கையிலிருந்து சில பாடங்கள்*


ஆதியாகமம் 12: 1-5

1 கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.....

5 ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும்,... கூட்டிக்கொண்டு அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்திலே சேர்ந்தார்கள்.

உங்களால் நம்ப முடிகிறதா?! கர்த்தர் காட்டும் இடத்திற்குச் செல்லும்படி ஆபிரகாமிடம் சொன்னார். ஆபிரகாம் கர்த்தர் மேல் விசுவாசமும் நம்பிக்கையும் வைத்து, செல்ல ஆயத்தமானார்.

மேலும் சாராள் பற்றி என்ன? அந்த இடத்தின் பெயர் தெரியவில்லை, எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.. ஆனாலும், ஆபிரகாமுடன் செல்ல தயாராக இருந்தாள். சாராள் எவ்வளவு கீழ்ப்படிதலுள்ளவள் என்பதை இது காட்டுகிறது.

'கீழ்ப்படிதல்' - அதைத்தான் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

ஏதேன் தோட்டத்தில் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை முறித்தது கீழ்ப்படியாமை. கீழ்ப்படியாமையின் பாவமே நம்மை தேவனிடமிருந்து ஆவிக்குரிய நிலையிலும் சரீர பிரகாரமாகவும் பிரித்தது. கீழ்ப்படியாமைக்குக் காரணம் அவர்களின் அவிசுவாசமே.

கீழ்ப்படிவது மிகவும் முக்கியம், அதுவும் திரும்பக் கேள்வி கேட்காமல்.

- கடவுளுக்குக் கீழ்ப்படியுங்கள் (அவருடைய கட்டளைகளுக்கு)

- பெரியவர்களுக்கு, பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள்

சாராளின் கீழ்ப்படிதலுக்கு விசுவாசம் தேவைப்பட்டது. அவள் தன் கணவன் மீது நம்பிக்கை வைத்திருந்தாள், அதற்கு மேல் அவர்களை இதுவரை வழிநடத்திய தேவன் மீது நம்பிக்கை வைத்திருந்தாள். அவள் அவரை நம்பினாள்.

* குறிப்புகள்:*

¶ *_கர்த்தருக்குக் கீழ்படிந்து_* அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுங்கள்

¶ *_உங்கள் பெற்றோர்/பெரியவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்_*

(முணுமுணுக்கவோ அல்லது திரும்பிப் பேசவோ கூடாது)

_*தேவனை நம்புங்கள்.*_ அவரை நம்புங்கள் .

உங்கள் அடுத்த அடியை எங்கு வைக்க வேண்டும் என்று நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், கர்த்தரிடம் கேளுங்கள். நீங்கள் அவரை நம்பினால், அவரை விசுவாசித்தால் அடுத்த படியை அவர் உங்களுக்குக் காட்டுவார்.

*இன்றைய தினத்திற்கான வேத பகுதி:*

📖 *எபேசியர் 6:1-3* 📖

1 பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.

2 உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்,

3 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.

 
 
 

Recent Posts

See All
Encouraging Thoughts

*✨ Encouraging Thoughts ✨* °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°• *★ Lessons from the Book of Ruth – 6* _*“Boaz: A Foreshadow of Christ the Redeemer”*_ (Ruth 4) In the final chapter of Ruth, we see

 
 
 
Encouraging Thoughts

*✨ പ്രോത്സാഹജനകമായ ചിന്തകൾ ✨* °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°• *★ രൂത്തിന്റെ പുസ്തകത്തിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ – 5* *_“ബോവസ്: ഒരു ദൈവഭക്തൻ ”_* (രൂത്ത് 2–4) രൂത്തിന്റെ പുസ്തകത്തിൽ, ദൈവഭക്തനായ ഒരു മനുഷ്യന്റ

 
 
 
Encouraging Thoughts

*Strength in Weakness – Through a Divine Perspective* 🤗 Once upon a time, there lived two dearest friends who shared every joy and sorrow of life. One day, with a trembling heart, one of them reveale

 
 
 

Comments


bottom of page